திண்டுக்கல்: திண்டுக்கல்: தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவரும், தலித் தலைவர்களில் ஒருவருமான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் நீடித்துள்ளது.
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் செவ்வாய்க்கிழமை இரவு திண்டுக்கல் - கரூர் சாலையில் நந்தவனம்பட்டியில் உள்ள தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பசுபதி பாண்டியனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் பசுபதி பாண்டியன். அவருடைய மனைவி வழக்கறிஞர் ஜெசிந்தா பாண்டியன். திண்டுக்கல்லை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்தபோது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்டங்களில் பதற்றம்...
பசுபதி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன். சில தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளின் மீது கல்வீசித் தாக்கப்பட்டதால் திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்து நிலையங்களில் பயணிகள் தவிக்கும்நிலை ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், பதற்றமான இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து பிரதேச பிரிசோதனைக்குப் பிறகு, பசுபதி பாண்டியனின் உடல், அவரது சொந்த ஊருக்கு இன்று காலை 11 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக