தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியனை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த பசுபதிபாண்டியன், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவராக இருந்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த வெங்கடேஷ் பண்ணையார் கோஷ்டிக்கும் இடையே நீண்டநாள்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவரை மற்றொரு கோஷ்டியினர் வெட்டிக் கொலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
பின்னர், வெங்கடேஷ் பண்ணையார் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், அவரது தம்பி சுபாஷ் பண்ணையாருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் விரோதம் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் பசுபதிபாண்டியனும், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் கடந்த 2006ஆம் ஆண்டு தூத்துக்குடிப் பகுதியில் ஒரு பாலத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரிகள் வீசிய வெடிகுண்டால் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார், பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராக இருந்த பசுபதி பாண்டியன், பின்னர் அக்கட்சியை விட்டு பேராசிரியர் தீரன் வெளியேறி தமிழ் பா.ம.க.வை தொடங்கியபோது அக்கட்சியின் பொதுச்செயலராக இருந்தார். பின் கடந்த 2005ஆம் ஆண்டு பா.ம.க.வில் இருந்து விலகிய முருகவேல்ராஜனுடன் சேர்ந்து, "தமிழர் அரசு'' என்ற தனிக் கட்சியை தொடங்கிய பசுபதிபாண்டியன் அக்கட்சிக்கு தலைவராக இருந்து வந்தார். கடந்த 2011இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார் பசுபதிபாண்டியன்.
இந்த நிலையில் திண்டுக்கல் புறநகர்ப் பகுதியான நந்தவனப்பட்டி இ.பி. காலனியில் வசித்து வந்த பசுபதிபாண்டியன், நேற்றிரவு வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த அவரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பசுபதி பாண்டியனுக்கு சந்தோஷ் என்ற மகனும், பிரியா என்கிற மகளும் உள்ளனர்.
பசுபதி பாண்டியன் கொலை எதிரொலியாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ள. திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சில இடங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக