ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 21 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணை தேவை: கிருஷ்ணசாமி




சென்னை, ஜன. 20: பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:  2001-க்குப் பிறகு தமிழகம், குறிப்பாக தென் மாவட்டங்கள் சமூக நல்லிணக்கத்தோடு அமைதிப் பூங்காவாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை சமூக விரோதிகள் படுகொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். கடந்த 6 மாத அதிமுக ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருந்தன. அவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, இனி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீராகும்.  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் "தானே' புயலால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு ரூ. 20 ஆயிரம், நெல் பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம், முந்திரி, பலா, தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார் கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக