ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 ஜனவரி, 2012

கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் ஜான் பாண்டியன்

அனைத்துச் சாதிகளுக்கும் மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்தார்.

அனைத்துச் சமுதாயத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னைத் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தலைமை தாங்கினார்.
இதில் யாதவர் மகாசபை தேவநாதன், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, தேவேந்திரகுல வேளாளர் சங்கத் தலைவர் ஜான் பாண்டியன், நாடார் பேரவைத் தலைவர் தர்மராஜ், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி, முன்னாள் நடுவண் அமைச்சர் அ.கி.மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பன உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பேசிய இராமதாஸ் மதுவை ஒழிப்பதற்கு அனைவரும் சேர்ந்து போராடினால்தான் முடியும். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி மக்கள் தொகை விகிதாச்சாரப்படி அனைத்துச் சாதியினருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக