ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 4 ஜனவரி, 2012

ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்







முல்லைப்பெரியாறு அணை காக்க மே 17 இயக்கம் மெரினாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாரதிராசாவும் தங்கர் பச்சானும் திராவிட எதிர்ப்பரசியலைக் கிளப்பினார்கள்.


திராவிட இயக்கத்தின் கருத்தியல் அல்லது கொள்கை எந்த அளவில் தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததென்றுபேச எவனும் முன்வருவானா? முடியாது. ஏனெனில் பெரியார் கேட்டதும் தனித்தமிழ்நாடுதான்.


கேரளா, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள்தான் திராவிட நிலப்பரப்பு என்று அந்த இயக்கங்களே சொல்லாதபோது இந்த தேவர்சாதி திமிர்பிடித்த பாரதிராசாவும் படையாச்சி தங்கரும் எந்த கனவுலகத்திலிருந்துகொண்டு திராவிட எதிர்ப்பைக் கையிலெடுக்கிறார்கள்?


சாதி, மத எதிர்ப்பை கையிலெடுத்து போராடும் பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கான எதிர்வினையா இது. அல்லது பரமக்குடியில் தேவர்சாதி ஆதிக்க அரசு நடத்திய படுகொலை ஆய்வறிக்கை நூல்வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்றதால் பாரதிராசாவுக்கு வந்த வெறுப்பா?


தமிழ்தேசியத்தின் கூறுகள் திராவிட அரசியலிலும் உண்டு. கூடுதலாக சாதி, மத எதிர்ப்பையும் கொண்டுள்ளது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரியார் வழி வந்தவர்களா? பெரியாரின் கொள்கையை விட்டுவிட்டு பிழைப்புக்காக அரசியல் நடத்தும் இவர்களை முன்வைத்து திராவிட எதிர்ப்பை கையிலெடுப்பவர்கள், பெதிகவையும் மதிமுகவையும என்னவாகப் பார்க்கிறாரகள்?


அறிவுப்பூர்வமாக அல்லாமல் இப்படியான திராவிட எதிப்பை போகிறபோக்கில் உளறுபவர்களை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? ஏனெனில் பாரதிராசாவின் கருத்தை அப்படியேதான் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதிக்கசாதி திமிரையும் மதத்தையும் கைவிடமுடியாதவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். மே 17 நேரடியாக அல்லாமல் இதுபோன்ற அரசியல் அரைவேக்காடுகளை வைத்து தந்தை பெரியார் வழி நின்று போராடும் தோழர்களை இழிவு செய்ய நினைக்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக