ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 18 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலைக்கு முன்னும், பின்னும் நடந்தவை என்ன?

செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்ட தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியனின் உடல், தூத்துக்குடி, கீழ அலங்காரத்தட்டு கிராமத்துக்கு, நேற்று (புதன்கிழமை) இரவு 8.30 மணிக்கு, கொண்டுவரப்பட்டது. இதுதான் அவரது சொந்த ஊர்.
அங்கு, பசுபதி பாண்டியன் உடலுக்கு, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், 9.30 மணிக்கு, அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் நினைவிடம் அருகே, அடக்கம் செய்யப்பட்டது.

பசுபதி பாண்டியன்
கடந்த 2006-ம் ஆண்டு பசுபதி பாண்டியனைக் கொல்வதற்காக தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். ஆனால், அந்தத் தாக்குதலில் அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார்.
.பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவர் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளனர். தென்காசியை அடுத்த சுரண்டையைச் சேர்ந்த ஆறுமுகசாமி மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆகிய இருவரும் இன்று வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் இருவரையும் 15 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்கள் நிஜமாகவே பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்பு பட்டவர்களா, அல்லது, கணக்கு காட்ட சரணடைய வைக்கப்பட்டவர்களா என்பது புலனாய்வில்தான் தெரியவரும்.
பசுபதி பாண்டியனின் போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்டின்படி அவரது உடலில், மார்பு. வயிறு, இடுப்பு, முதுகு,

நேற்று (புதன்கிழமை) தூத்துக்குடியில்..
கழுத்து ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. இந்தக் காயங்களில் கூரான ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும், தடியால் அடித்த காயங்களும் உள்ளன. உடலின் ஒரே ஸ்பாட்டில் மீண்டும் மீண்டும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் சொல்கிறது.
அதன் அர்த்தம், தாக்கியவர்கள், தடிகளாலும், கூரிய ஆயுதங்களாலும் அவரது உயிர் பிரிந்தது உறுதியாகும்வரை தொடர்ந்து தாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
வழமையாக அவரது ஆட்கள் 24 மணிநேரமும் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தபடி இருப்பார்கள். அவரது வீட்டிலும், பாதுகாப்புக்காக சிலர் நிரந்தரமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பசுபதி பாண்டியன் தனிமையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் கூடிவே இருக்கும் ஆட்கள் சொந்த வேலைகளுக்காக அன்றிரவு தூத்துக்குடி சென்றிருக்கிறார்கள். ஒரேயொரு நபர் மட்டும் பசுபதி பாண்டியனுடன் இருந்திருக்கிறார். அவரை சிகரெட் வாங்கி வருமாறு பசுபதி பாண்டியன் கடைக்கு அனுப்பிய பின்னரே தனிமையில் இருந்திருக்கிறார்.
கொலையாளிகள் உபயோகித்த பொருள் என்று அவரது வீட்டுக்கு அருகேயிருந்து சைக்கிள் ஒன்றை எடுத்து வைத்திருக்கின்றனர் போலீஸார். வேறு தடயம் ஏதும் கிடைத்ததாக தகவல் இல்லை.
2006-ம் ஆண்டு தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பசுபதி பாண்டியன் சென்ற கார்மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அந்தத் தாக்குதலின்போது, மற்றொரு காரில் ஏறிச்சென்று மயிரிழையில் தப்பினாலும், மனைவியை பறிகொடுத்த பசுபதி பாண்டியன், அதன்பின் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியில் இருந்து வெளியேறி, திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள நந்தவனப்பட்டியில், மகன் சந்தோஷ், மகள் பிரியாவுடன் வசித்து வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக