ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 7 ஜனவரி, 2012

ஜன., 9ல் ஆர்ப்பாட்டம் புதிய தமிழகம் அறிவிப்பு

ஈரோடு: ""முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, ஜன., 9ல் மத்திய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் முன்னிலையில், இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி ஜனவரி 9ல், தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் காலை 11 முதல் மதியம் 12 மணி வரை புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். "தானே' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு போதாது. குறுகிய காலப்பயிருக்கு, 20 ஆயிரம், ஓராண்டு பயிருக்கு, 50 ஆயிரம் ரூபாய், தென்னை, முந்திரி போன்ற நீண்ட கால பயிருக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில், ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டல் தொட்டி கட்ட, சிறு விவசாயிக்கு 4,000 ரூபாய், பெரு விவசாயிக்கு 2,000 ரூபாய் வீதம் நிதி அளிக்கப்பட்டதாக கணக்கில் உள்ளது. வெறும், 717 தொட்டி மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இத்தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்றதா; அல்லது வேறு என்ன நடந்தது? என தெரியவில்லை. நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான, 10 ஆயிரத்து 200க்கும் அதிகமான தொட்டிகள் கட்டப்படவில்லை. இவற்றை விரைந்து கட்ட வேண்டும். இல்லையெனில், நிதியை திரும்ப பெற வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக