ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 அக்டோபர், 2011

நாம் தமிழர் என்பது எத்தனை உண்மை....

 



சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை தமிழன் என்று சொல்லிக் கொள்வதில்  வெட்டிப்பெருமை, அதுபோன்றதொரு வெட்டி பெருமிதங்கள்தான் திராவிடன், இந்தியன் போன்ற அடையாளங்களும் என்பதை முன்வைத்தே முந்தைய கட்டுரை எழுதியிருந்தோம். அதில் நாம் தமிழராய் அணி திரள சொல்லும் பெருமளவிலான நண்பர்களின் மௌனம் எதை சொல்ல வந்தது, எதை சொல்ல முடியாமல் தவித்தது என்கின்ற ஊகங்களை வாசிக்கும் நண்பர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். தமிழன் என்ற அடையாளம் நியாயமானதாய் இல்லை. சக தமிழனை இழிவுப்படுத்தும் விதமான சாதியை பின்பற்றிக் கொண்டே நாம் தமிழராய் ஒன்றிணையுங்கள் என்னும் முழக்கம் போலித்தனமாக இருக்கிறது. தயவு கூர்ந்து கவனியுங்கள் என்று அடிப்படையிலேயே எழுதியிருந்தோம். திராவிட விஞ்ஞானிகளும் பதில் கூறவில்லை, தமிழ் அறிவாளிகளும் கருத்துக் கூறவில்லை.
ஆனால், சாதியை வெறியை அதாங்க நல்ல கேட்க இதமாக சொல்ல வேண்டுமென்றால் உணர்வை தன் வாழ்வியலாக வாழும் நபர், தற்போது, அந்த சாதிய அசிங்கங்கள் எதையும் தூக்கி எறியாமல் தமிழனாக அணிதிரண்டிருக்கும் நபர்களில் ஒருவர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே…
பாலு தேவர் என்கிற பெயரில் பின்னூட்டம் இட்டிருந்த அறிவாளிதான் அவர். வரலாற்று பின்புலமற்ற தமிழ்ச்சமூகத்தின் பொது உளவியலான சாதி புத்தியிலிருந்து அணுகி பயங்கரமாக கேள்வி கேட்டிருந்தார்…. அப்படியே கேள்வியில் மடக்குறாறாமா…நாம் நம்ம தலைவரை மடக்க முயற்சிக்கலாமா?
அவர் முன்வைக்கும் கேள்விகளில் இரண்டு மிக முக்கியமானது.
1) அம்பேத்கர் சாதி தலைவரா இல்லையா? என்பது….
2) மற்றொன்று முத்துராமலிங்கம் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடினார்  என்பது.
======================================================
நாம் தமிழர் இயக்கத்தில் வெட்கமே இல்லாமல் தூக்கி பிடிக்கப்படும்  மற்ற தலைவர்களை கேவலப்படுத்தப்படும்விதமாக தூக்கி பிடிக்கப்படும் நபர்களில் ஒருவர்தான் முத்துராமலிங்கம்.
யார் இந்த முத்துராமலிங்கம்  யார் என்பதை தோலுறிக்கும் கட்டுரை கீழ்க்கண்ட கட்டுரை.

1)  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்(http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html)

மேற்கண்ட கட்டுரை ஏதோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதாகவும், திரிபு செய்யப்பட்டதாகவும் கூறக்கூடும். தமிழ்ச்சமூகத்தில் ஏழைகள் படிக்க காரணமாயிருந்த காமராசரை முத்துராமலிங்கம் அப்படி திட்டவில்லை என்று நிருபிக்கும் வரைக்கும், மேடைகளில் குறைந்தபட்சம் காமராசரையும், முத்துராமலிங்கத்தையும் தூக்கி பிடிக்காமல் இருக்க இயலுமா? முடியாது. ஏன் முடியாது? முத்துராமலிங்கத்தை தூக்கி பிடிக்கவில்லையானால், பாலு தேவன்(கருமண்டா?) போன்றவர்களுக்கு தமிழன் என்ற உணர்வே வராது. இருப்பது சாதி உணர்வு பின்னே மசிறிலிருந்தா தமிழுணர்வு வரும்.
இதில் மேலோட்டமா சாதி கடந்து வான்னு அழைப்பு கொடுத்தாப்ல இந்த அறிவுஜீவியில்லாம் சாதியை அப்படியே விட்டுட்டு வந்திருவாராம்…
என் சாதி எனக்கு  முக்கியம், உன் சாதி உனக்கு முக்கியம்னு ஒரு ஜந்து வந்து உளறுது…..நாம் தமிழர் என்று பறைசாற்றும் தோழர்களுக்கு இதை தட்டி கேட்பதைவிட அப்படி என்ன………..வேலையோ?
தோழர் சீமானிடம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்கு கேட்கப்பட்ட பேட்டியில் அவர் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலைபோட்டது குறித்த கேள்விக்கு குற்றப் பரம்பரையினருக்காக பெரியார் என்ன செய்தார் என்று மக்கள் கேட்கிறார்கள் என்று கூறியிருந்தார். அந்த கேள்விக்கு பதிலாக பெரியார் திராவிட கழக தோழர் கீழ்க்கண்ட பதிவில் மிக விளக்கமாக குற்றப்பரம்பரையினருக்காக பெரியார் என்ன செய்தாரென்று எழுதியிருக்கிறார்.

குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?(http://thozharperiyar.blogspot.com/2009/12/blog-post_23.html)

(பி.கு: இந்த கட்டுரை அண்ணன் சீமானிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.)
மேற்சொன்ன இணைப்பின் சிறுபகுதியை கீழே இணைக்கிறேன்..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும் பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர் தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.
தமிழ்நாட்டில் செய்யூர் ஆதி திராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911-லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப் பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச் சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதோடு நில்லாமல் சாதிய சிமிழுக்குள் அடைபட்டு கிடந்து கூவும் பாலு தேவர் போன்ற ஆதிக்க சாதி முட்டா பசங்களுக்கு மேலும் ஒரு தகவல்…
அம்பேத்கர் சாதி தலைவரில்லடா…மகனே…
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குற்றப்பரம்பரையினருக்காக அம்பேத்கர் பேசியதை கொஞ்சம் கூர்ந்து கேள்
==================================================
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,
…. இந்தியா மந்திரி அவர்களே குற்றப் பரம்பரையினர் எனப்படுபவரின் கொடூர நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். குற்றப் பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக் கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்.
…. இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்த சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டம் பத்தி 108-ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?
…. ஒருவர் ஆதிவாசியா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது.
என விரிவாகப் பேசி, இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்.
=================================================
குற்றப்பரம்பரையினருக்காக அம்பேத்கரும் குரல் கொடுத்திருக்கிறார், பதிவு செய்திருக்கிறார். ஆனாலும், அவரை ஏற்றுக் கொள்ள மாட்டோம், முத்துராமலிங்கம்தான் உங்கள் தலைவர்னா…
உங்களை போன்ற நபர்கள் தமிழனாகும் தகுதியை பெறவே வாய்ப்பில்லை….என்பது வீட்டு சுவற்றில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்…
அம்பேத்கரை குறித்து இன்னும் கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்ள கொஞ்சம் சாதி திமிரை கழற்றி வைத்துவிட்டு வாசியுங்கள்.
அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டும்தான் உழைத்தாரா?(http://mathimaran.wordpress.com/2009/11/09/article-249/)


படிச்சு முடிச்சுட்டு குடிச்சுப்புட்டு உளர்ற மாதிரி அம்பேத்கர் உங்க சாதி தலைவர், உங்க சாதி தலைவர்னு எந்த வெண்ண மசிறாவது வந்தா,  அவர் எந்த சாதிக்கு தலைவர்னு தெளிவா சொல்லிட்டு வாங்கடா…அம்பேத்கர் சாதி தலைவராங்கடா மடப்பசங்களா?
என்ன பண்பாடில்லாமல் போகுதேன்னு பார்க்கிறீர்களா? தோழர்களே..சாதியே பண்பாடாய் போன சமூகத்தில் என்ன வெளக்குமாறு பண்பாடு வேண்டியிருக்கிறது. அம்பேத்கர் என்கிற மகத்தான தலைவன் சாதிய தலைவனென்றால்……
தோழர்களே, அடித்து கூறுகிறோம்………..
உலகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக  போராடியதாக நீங்கள் கருதிக் கொள்ளும் தலைவர்களில் எல்லாம் சிறந்தவர் அம்பேத்கர்
நாயினும் கீழாக மதிக்கப்பட்ட சமூகத்தை தலைநிமிர செய்ய ஓயாது உழைத்த தலைவர் அண்ணல் அம்பேத்கர்…
==================================================


சமூக போராளிகளின் படங்களை நீக்க வேண்டும்
இந்த விவாதங்களினூடாக ஒன்றை அழுத்தமாக முன்வைக்க விரும்புகிறோம்.
தமிழ்த்தேசியம் என்னும் பெயரில் கண்ட கழிசடை சாதி வெறியர்களோடு, அண்ணல் அம்பேத்கரின் படத்தை மாட்டி வைத்திருப்பதை முதலில் நீக்க சொல்லி கோரிக்கை வைக்கிறோம் அதேபோலத்தான் பெரியாரின் படத்தையும்.
நாம் தமிழர் அமைப்பின் தலைவர்கள் யார்? கொள்கைகள் என்னென்ன? என்பதை தெளிவாக அறிவித்துவிட்டு….எம் தலைவர்களுக்கு  அங்கே இடம் தேவையா என்பதை முடிவு செய்யட்டும்.எம் தலைவர்களின் படங்களை காட்சி பொருளாக மட்டும் இதுகாறும் திமுக, அதிமுக, விசி, பாமக போன்ற கட்சிகள் பயன்படுத்தி வந்தன..இனியும் சகித்துக் கொள்ள முடியாது.
கொள்கை தெளிவும், சாதி வெறியர்களை தூக்கியெறியும் துணிவும் இல்லையெனில் எமது தலைவர்களை அவமதிக்காமல் படங்களில் வரிசையிலிருந்து தயவு கூர்ந்து நீக்கி விடுங்கள்…
==================================================
முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டதனாலேயும், முத்துராமலிங்கத்தின் பெயரை மேடைகளில் உச்சரித்ததனாலேயும்தானே உங்களுக்கு இத்தனை கோபம் பீறிட்டு எழுகிறது…..ஏன் உங்களுக்கு இத்தனை சாதிவெறி…..? தெரிஞ்சோ தெரியாமலோ அந்த மக்கள் அவரை தலைவரா நினைக்கிறாங்க….அவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது? எப்பவோ நடந்த சண்டையை இன்னும் நினைச்சு பேசணுமா? மக்கள் ஒண்ணாகவே கூடாதா?
ஆகா, பாத்தீங்களா? எத்தனை அற்புதமான கேள்வி…..இது முத்துராமலிங்கத்திற்கு முன்னிறுத்துவற்கு வைக்கப்படும் வாதம்.
நாங்களும் அதிஅற்புதமான கேள்வி கேட்போமில்லையா?
தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கும் ஆதிக்க சாதியிடம் இதுதான் நியாயமான அணுகுமுறையென்றால்…
தமிழர்களை ஒடுக்கும் சிங்களர்களின் தலைவன் ராஜபக்சேவை கொஞ்சம் பாராட்டி, நம் கட்சி மேடைகளில் படம் வைத்து, அவனுக்கு ஒரு சிலை வைத்து ஒரு தமிழனையும் அழைத்துக் கொண்டு மாலையெல்லாம் போட்டுவிட்டு, தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு சிலை அமைத்து ஒரு சிங்களவனை அழைத்து வந்து மாலை போட வைத்துவிட்டால் இன நல்லிணக்கம் நிகழ்ந்துவிடும். நடந்த  சண்டைய எத்தனை நாள் நினைவு வச்சிக்குறது….சிங்களவனும் தமிழனும் ஒண்ணாகவே கூடாதா?
இதை படிக்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்கு எத்தனை கோபம் பீறிட்டெழும்….அரசியல் அறிவோ, அடிப்படை அறிவோ கூட  ஏண்டா கேனத்தனமா கேள்வி கேட்டு பசப்புறேன்னு திட்டுவீங்க இல்லை…
ஆனால், ஆட்களையும் பெயர்களையும் மாற்றி எம்மிடம் கேனத்தனமா பசப்பும் பொழுது  எத்தனை கோபம் வரும்…
====================================================
ரெண்டு பக்கமும் மாலை போட்டு ஏமாத்துறேங்களே தோழர்னு கேட்டேன் அவர் சொன்ன பதில் இதுதான்…
“உங்க கட்சி மேடைகள்ல தாரளமாக படம் போட்டுகங்க ராசா! நாங்க ஒன்னும் சொல்லவில்லை அம்பேத்கார் படத்துக்கு பக்கத்துல முத்துராமலிங்கம் படம் போடுவதுமாதிரி முத்துராமலிங்கம் சிலைக்கு பக்கத்துல அம்பேத்கார் சிலையையும் வைச்சிட்டு வந்து நீங்க படம் போடுங்க” (நன்றி: தமிழன்பன்)
முடியுமா? எந்த தமிழ்த்தேசியவாதியிலாவது…. கேட்டால் மக்கள் மாறணும்…இப்பவே பேச முடியாது….மண்ணாங்கட்டின்னு பதில் வ்ரும்…
மீண்டும்…அழுத்தமாக பதிகிறோம்…சாதி முரண்களை தீர்க்காமல்..நாம் தமிழராய் அணி திரள்வது எட்டாக்கனி…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக