ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 அக்டோபர், 2011

சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனுக்கு வீர வணக்கம்


இம்மானுவேல் சேகரன் (1924: -1957)-
தேவேந்திரர் மக்களை சாதிய அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்களையும் மனிதர்களாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவர் சிந்தித்தார். சாதிய அடிமைத்தனத்தை அழித்தொழிக்கும் துணிவுமிக்கப் போராட்டத்தில் தனக்கு எந்தநேரமும் மரணம் நேரலாம்/ ஆதிக்க சாதிவெறியர்களால்தான் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலையிலும் துணிவுமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்த சாதியொழிப்பு போராளிகளில் முதன்மையானவர் இம்மானுவேல் சேகரன்.
இளமையும் கல்வியும் :
இராமநாதபுரம் மாவட்டம்/ முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தில் (பரமக்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது) 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் நாள் சேது என்ற வேதநாயகம் – ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே ஆங்கிலக் கல்வி கற்றவர். இவரது தந்தை வேதநாயகம் ஆசிரியராகவும்/ வழக்கறிஞராகவும் பணியாற்றினார். களையூர் முதற்கொண்டு பல கிராமங்களில் தனியாகப் பள்ளிகளை நடத்தி வந்தார். ஆங்கிலத்தையும்/ கணிதத்தையும் திறமையாகக் கற்பிப்பதில் புகழ் பெற்றிருந்தார். பரமக்குடியில் புகழ்பெற்ற நாட்டு வக்கீல்களில் (பர்ன்ற்)) ஒருவராக திகழ்ந்தார். இளமையிலேயே தனது தந்தையின் சமூகப்பணியால் ஈர்க்கப்பட்டார் இம்மானுவேல். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். ((இட்ன்ழ்ஸ்ரீட் ர்ச் நஜ்ங்க்ங்ய் ஙண்ள்ள்ண்ர்ய்)பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். அவர் படிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தைப்போலவே/ விளையாட்டிலும் திறமையாக இருந்தார். கால்பந்து விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்1.
இராணுவத்தில் பணி
சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம்/ உருது/ இந்தி/ ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்2.இராணுவ வாழ்க்கையில் அவர் அனுபவித்த சமத்துவம்/ மரியாதை போன்றவற்றைத் தனது சமுதாய மக்கள் அனுபவிக்க முடியவில்லையே என வேதனைப்பட்டார். என் தாய் நாட்டையும்/ மக்களையும் அன்னியர்களிடமிருந்து/ இன்னுயிரைத் தந்து காக்க நான் தயாராக இருக்கும் போது/ என் சமூக மக்களை இந்த இழிநிலையிலிருந்து மீட்க ஒருவரும் இல்லையே என வேதனையடைந்தார். ‘என் நாட்டைக் காக்க ஏராளமான இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள் ஆனால்/ என் சமூகத்தினரைக்காக்க எந்தத் தலைவன் இருக்கிறான்? இந்தக் கேள்வியினால் என் நாட்டைக் காப்பதை விட என் சமூக மக்களைக் காப்பதே என் முதல் கடமை’ எனக் கூறி அவில்தார்ப் பணியை உதறித் தள்ளினார்.
திருமணமும் இல்வாழ்வும்:
1946ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைய்த் தனது இலட்சிய வாழ்க்கையின் துணையாக ஏற்றார்.சமூக விடுதலைப் பணிக்குத் திருமண வாழ்க்கைத் தடையில்லைள என்பதையுணர்ந்த தியாக உள்ளத்தோடு குடும்பச் சுமையை/ தனது ஆசிரியப் பணியோடு சேர்த்து சுமந்தார் அமிர்தம் கிரேஸ்.அம்மையார் அவர்கள் வீராம்பல் எனும் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு சாமுவேல்/ மரியம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். இராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பை 1938 ஏப்ரல் மாதம் முடித்தவுடன் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியையானார்.இந்த இலட்சிய தம்பதிகளுக்கு மேரிவசந்த ராணி/ பாப்பின் விஜய ராணி/ சூரிய சுந்தரி பிரபா ராணி/ மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.தனது இலட்சிய வாழ்விற்கு உறுதுணையாக இருந்தார். தியாக உள்ளத்துடன் ஆசிரியப்பணியையும்/ குடும்பப் பொறுப்புகளையும் மனநிறைவுடன் கவனித்துக் கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கொஞ்சமும் தளர்வோ சோர்வோ இன்றி தீரமுடன் இம்மானுவேல் ‘மக்கள் விடுதலைப்பணியில்’ ஈடுபட்டதற்கு அமிர்தம் அம்மையாரின் தியாகமும்/ அற்ப்பணிப்புமே காரணம் எனலாம்..இளமையிலேயே கணவனை இழந்த போதிலும் அதே தியாக/ அற்பணிப்புடன் அம்மையார் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இறுதிவரை கணவரின் இலட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த அம்மையார் 1985ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் காலமானார்.
காங்கிரஸில் இம்மானுவேல்:
தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அக்காலத்தில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. இப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட பார்ப்பனர் ‘அரிசனத் தந்தை’ என அழைக்கப்பட்ட திரு. வைத்தியநாத அய்யர். இவர் இந்தப் பணியை மதுரை மாவட்டத்தை மையமாக வைத்துச் செய்தார்.காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த திரு. கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த திரு. வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார். வீராம்பல்/ கருமல்/ பேரையூர்/ மருதகம்/ பெரியஇலை/ காக்கூர் சிக்கல் முதலிய கிராமங்களில் இம்மானுவேல் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த ஊர்களுக்கு இவர் சென்று விட்டாலே மக்கள் திரண்டு வருவார்கள். ஊரின் பொது இடத்திலோ/ மரத்தடியிலோ அல்லது வீட்டுத் திண்ணையிலோ கூட்டங்கள் நடத்தினர். அரிக்கேன் விளக்கு/ பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில்தான் கூட்டங்கள் நடந்தன.’இந்தநாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியை காங்கிரஸ் பேரியக்கம் விரட்டிவிட்டது. இனியும் நாம் பிறருக்கு பயந்து கொண்டு அடிமைகள் போல வாழவேண்டியதில்லை. சட்டமும்/ அரசும் நமக்கு ஆதரவாக இருக்கின்றன; இனி நாம் ஆதிக்க சாதியினருக்கு தலை வணங்கும் ஈனப்பிறவிகளாக இருக்க வேண்டியதில்லை/ நம்மை இழிவுபடுத்தும் கொடுமைகள் அனைத்திற்கும் சாவுமணி அடிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது’ என்ற எழுச்சிமிகு பேச்சுக்கள் இளைஞர்கள் மனதில் ஆவேசமான விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டு போராட்ட நெருப்பைப் பற்றி எரிய வைத்தது.காங்கிரஸ் கட்சியின் மூலம் காமராஜ்/ கக்கன் ஆகியோரோடும் இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் ‘தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக’ மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.’நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது’ என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள்.கமுதி : திரு. முத்துமாணிக்கம்கருமல் : திரு. ஜெயராஜ்கன்னிச்சேரி திரு. சந்தானம்கூரியூர் : திரு. எஸ்.கே. வேலுபரமக்குடி : திரு. பாலச்சந்திரன்சித்தூர் : திரு. காளியப்பன்.காங்கிரஸில் உறுப்பினராய்ச் சேர்ந்த நாளில் இருந்து சாகும்வரை தூய வெள்ளை கதராடையே உடுத்தி வாழ்ந்து வந்தார்
வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி:
இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர்.அதே நேரத்தில் கட்சித்தலைவர்களிடமும் பெரியோரிடமும் மரியாதையுடன் பழகுவார். தனது குடும்பத்தையும் சொந்த நலனையும் விட சமுதாயத்தையே பெரிதாக நேசித்தார். இசையில் ஈடுபாடு உள்ளவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்/ நாமக்கல் கவிஞர் ஆகியோரது பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஏ. எம். ராஜா பாடல்களை விரும்பிப்பாடுவார். சிலம்பாட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெறாவிட்டாலும் கூட அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.பிறப்பினால் கிறித்தவராக இருந்தாலும் இம்மானுவேல் தாழ்த்தப்பட்ட இந்துக்களிடையே எள்ளளவும் பாரபட்சமின்றி பழகி வந்தார். இம்மானுவேல் ஒரு கிறித்தவன்/ அவனை எப்படித் தலைவனாக ஏற்றுக் கொண்டீர்கள்? என்ற சாதி -இந்துத் தலைவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க எண்ணிய திரு.கக்கன் இம்மானுவேலின் பெயரை ‘இம்மானுவேல் சேகரன்’ என மாற்றினார்.செல்லூர் – வீட்டை காலிசெய்து வெங்கட்டான் குறிச்சிக்கு தட்டு/ முட்டு/ சாமான்களை வண்டியில் ஏற்றி வந்த அலுப்பில் இம்மானுவேல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால்/ சாதி வெறியர்கள் இமைப்பொழுதும் தூங்காது அவரைக் கொல்லத் தருணம் தேடி அலைந்தனர். அன்றிரவு வீட்டின் கூரைமீதேறி ஓட்டைப் பிரித்து எடுத்தனர். திருடர்கள் போல அனைவரும் தூங்கிவிட்டனரா இல்லையா? என்பதை அறிய/ ஒரு கல்லை வீட்டிற்குள் போட்டனர். அக்கல் மூத்த குழந்தை தலையருகில் விழவே விழித்துக் கொண்டது. குழந்தை இம்மானுவேலை எழுப்ப கட்டிலில் படுத்திருந்தவர் விழித்துப் பார்த்ததும் திடுக்கிட்டார். வரிசையாக கூரையில் ஓடுகளே இல்லை.’யார்ரா அது எவன் ஓட்டைப் பிறிச்சவன்?’ என்று சத்தம் போட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தார். கூரையிலிருந்து குதித்து பத்துக்கும் குறையாத கும்பல் தலைதெரிக்க ஓடிக் கொண்டிருந்தது. மனைவி சொல்லியும் கேளாது கூட்டத்தினரைத் தான் ஒருவராகவே துரத்தியடித்தார். இம்மானுவேல் குரலை கேட்டதும்/ குலைநடுங்கி வயற் காட்டிற்குள் கூட்டம் ஓடி ஒளிந்தது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக