விடுதலை பெற்ற நாட்டில் ‘குடியரசு’ நாட்டில் சாதி ஆதிக்கவாதிகளோடு பேச்சு வார்த்தையில் சமமாக அமர்ந்தான் என்பதற்காக, சாதிவெறியர்களால் இமானுவேல் சேகரன் கொலைச் செய்யப்பட்டான். இது நடந்தது 1957 செப்டம்பர்11 ஆம் நாள். அது பெரியாரை பாதித்தது. ஒவ்வொரு கூட்டத்திலும் அதை பேசினார் பெரியார். குற்றவாளிகளைப் பிடிக்கிறபோது, உயர்சாதிக்காரர்களான தேவர்களை போலீஸ் சுட்டது. எல்லோரும் இதை கண்டித் தார்கள். அப்போது பெரியார் சொன்னார், இவனை அப்போதே சுட்டிருந்தால் இத்தனை தாழ்த்தப் பட்டவர்கள் வீடு எரிந்திருக்காது என்றார். நான் ஆட்சியில் பொல்லாத வாய்ப்பு கிடைத்து இருந்திருப்பேனேயானால் நான் அப்போதே சுட்டிருப்பேன் என்றார் பெரியார்.
1957 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு பேட்டி காண்கிறது. “இந்த குற்றவாளிகளை கைது செய்து சிறையில் வைக்கவில்லையென்றால் நான் நேரடியாக போராட தெருவில் இறங்குவேன்” என்றார், பெரியார். நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் மாநாடு கூட்டினார். அவருக்கு எடைக்கு எடை வெள்ளிக் கொடுக்கிற மாநாடு. அந்த மாநாட்டில்தான் பெரியார், அரசியல் சட்டத்தை எரிக்கப் போகிறேன் என்றார். உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த அந்த நெருப்பு அப்போது வெளி வந்தது. இந்த சாதியை பாதுகாக்கின்ற சட்டத்தை எரிக்க, தனது தொண்டர்களை தயாராக இருங்கள், கணக்கெடுங்கள் என்றார். இமானுவேல் சேகரனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அதன் தொடர்ச்சியாகத்தான் பெரியார் இந்த சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக