பரமக்குடி, மதுரையில் போலீஸ் அத்துமீறல் தேவேந்திரர்கள்மீது கொலைவெறி தாக்குதல், 7 பேர் உயிரிழப்பு - மள்ளர் நாடு தலைவர் திரு சுப அண்ணாமலை கடும் கண்டனம் | |
பரமக்குடி, மதுரையில் போலீஸ் அத்துமீறல் தேவேந்திரர்கள்மீது கொலைவெறி தாக்குதல், 7 பேர் உயிரிழப்பு - மள்ளர் நாடு தலைவர் திரு சுப அண்ணாமலை கடும் கண்டனம் கடந்த செப்டம்பர் 11 அன்று தேவேந்திர குலத்தின் தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனின் 54வது குருபூஜை நடைபெற்றது. எங்களது சமூக தலைவரை கைது செய்துவிட்டதாக 20 பேர் பரமக்குடியில் சாலை மறியலில் ஏடுபட்டனர். அந்த மறியலை கலைக்க போலீஸ் அதிகாரியான செந்தில்வேலன் துப்பாக்கி சூடு நடத்தியதை மள்ளர் நாடு மள்ளர் கழகம் வண்மையாக கண்டிக்கிறது. இதன் பின்னனியில் ஆதிக்க சாதி இருக்கிறது என்று மள்ளர் நாடு சந்தேகிக்கிறது. எனவே C.B.I. விசாரணை நடத்தி இந்த கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மள்ளர் நாடு கேட்டுக்கொள்கிறது மேலும் இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து வருகிற 19ம் தேதி முதல் மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை மள்ளர் நாடு முன்னின்று நடத்தும். இவ்வாறு மள்ளர் நாடு மள்ளர் கழக தலைவர் திரு சுப அண்ணாமலை அவர்கள் தெரிவித்தார். |
ஞாயிறு, 9 அக்டோபர், 2011
பரமக்குடி, மதுரையில் போலீஸ் அத்துமீறல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக