பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
தொடர்ந்து 18ஆண்டுகளாக நாங்கள் அமைதி, கட்டுப்பாடுடன் அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
ஆனால், இந்த ஆண்டு பல்வேறு சக்திகளின் ஊடுருவல் காரணமாக 18 ஆண்டுகால நிகழ்ச்சி சீர்குலைக்கப்பட்டு விட்டது. துப்பாக்கிச் சூட்டோடு ஏழு பேர் பலி, தொடர்ந்து போலீசாரின் கைது நடவடிக்கை, மாரடைப்பால் ஒருவர், பாம்பு கடித்து ஒருவர் என ஒன்பது பேர் பலியாகினர்.
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒட்டுமொத்த மனித உரிமை மீறலால் அ.தி.மு.க., அரசு செயலிழந்து விட்டது. கடந்த 91-96ல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பல உரிமை மீறல்கள் நடத்தப்பட்டன. காலப்போக்கில் இவர்களிடம் மாற்றம் ஏற்படும் என எண்ணி, சட்டசபை தேர்தலில் ஆதரவளித்தோம். ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளும், போலீசாரின் நடவடிக்கையால் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த செயலை ஜெ., கண்டிக்கவில்லை. இறந்தவர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கவில்லை. ஆகவே, திருச்சி சட்டசபை இடைத் தேர்தலில் அ.தி.மு.க., வுக்குஆதரவளிக்கவில்லை. பலியான ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. சென்னை தலைமை நீதிபதி மேற்பார்வையில், 2 அமர்வு நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு வேண்டும். அதில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக