"ஒட்டப்பிடாரத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்திய புதிய தமிழகத்திற்கு உங்கள் ஓட்டுகளை அளியுங்கள்" என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பிரச்சாரம் செய்தார். ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில்:
"உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஊழலற்ற ஆட்சி அமையுமாறு வாக்களிக்க வேண்டும். கடந்த ஐந்து மாதத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை நான் செய்துள்ளேன். ஓட்டபிடாரத்தில் தாலுகா அலுவலகத்திலும், யூனியன் அலுவலகத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
பேருந்து வசதிகள் அதிகப்படுத்தி தரப்பட்டுள்ளது. நில மோசடி முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சம் தீர்த்து வைத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களுக்காக இன்னும் சிறப்பாக தொண்டாற்றிட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்கின்றனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சியில் உள்ளாட்சி நிதியில் பல கோடி மோசடி நடைபெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து கொண்டு மக்கள் பணியாற்றாமல் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர்.
ஒட்டப்பிடாரத்தில் உள்ள ஊராட்சி மன்றத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்ற சின்னத்துரை ஊழல் செய்து பல கோடி சம்பாதித்துள்ளார். எனவே அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
ஊழலற்ற ஆட்சி அமைந்திட 10 வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வழக்கறிஞர் கனகராஜ் அவர்களுக்குப் பேருந்து சின்னத்திலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குத் தென்னைமரம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்."
இவ்வாறு டாக்டர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக