ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 26 ஆகஸ்ட், 2015

ராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்!... டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A .,




தென் தமிழகம் அடிக்கடி சாதிய மோதல்களுக்கு இலக்காகி அமைதி இழந்திருந்ததை நாடறியும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மதுரையை மையமாகக் கொண்ட தென் மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தேறின. அதில் தேவேந்திரகுல வேளாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் சிலைமான் என்ற இடத்தில் இரு சமுதாயங்களிடையே மோதல்; திருமங்கலம் குராயூரில் அடிக்கடி மோதல் மற்றும் கொலைகள்; உசிலம்பட்டி பகுதியில் மோதல்; நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பட்டியலின மக்கள் படுகொலை என தொடர்கதையாயின.
1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அதனால் தென் தமிழகமே கலவர பூமியானது. மேலும் 1997-ஆம் ஆண்டு விருதுநகரை மையமாக வைத்து வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் உருவாக்கப்பட்டபோது முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோர்க்கும் எண்ணற்ற மோதல்கள் ஏற்பட்டு உயிர்சேதமும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. அப்பொழுதே தேவேந்திரகுல மக்கள் மதுரை விமான நிலையத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலமாக எழுப்பினர்.
சுந்தரலிங்கம் பெயரை நீக்வேண்டும் என்பதற்காகவே அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் இயங்கிவந்த போக்குவரத்துக்கழகங்களும் மாவட்டப் பெயர்களும் நீக்கப்பட்டன. தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேருந்துகள், கல்விநிலையங்கள், மாவட்டங்கள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு தலைவரின் பெயரையும் சூட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படியே கடந்த 18 வருடங்களாக எந்தவொரு தலைவரின் பெயரும் எதற்கும் சூட்டப்படாமல் இருந்தது. இதனால் தென் தமிழகத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவிவருகிறது .
அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தென் தமிழகத்தில் சிலர் சாதித் ‘தீ ’ மூட்ட முயற்சி செய்கின்றனர். மதுரை விமான நிலையத்துக்குக்கும் ஓடுபாதைக்கும் 1932, 1935, 1942, 1950, 1999 ஆகிய ஆண்டுகளில் தங்களது நிலங்களைக் கொடுத்தவர்கள் அதற்கு அருகேயுள்ள சின்ன உடைப்பு கிராமத்து தேவேந்திரகுல வேளாளர்கள் ஆவர். எனவே மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைக்க வேண்டுமாயின் அதற்கு நிலங்களைக் கொடுத்த தேவேந்திரகுல மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரையே சூட்டவேண்டும்.
தென் தமிழகத்தில் நிலவும் சமூக சூழ்நிலைகளை நன்கு அறிந்திருந்தும் ஏதும் அறியாதவர் போல மீண்டும் முக்குலத்தோருக்கும் தேவேந்திர குல வேளாளருக்கும் மோதலை உருவாக்கி சிந்தும் இரத்ததின் மூலம் அரசியல் லாபம் தேட துடிக்கும் வகையிலேயே ராமதாஸ் சம்பந்தமே இல்லாமல் மதுரை விமான நிலைய பிரச்சினையை கிளப்புகிறார் .
வடமாவட்டங்களில் கெளரவக் கொலைகளை நிகழ்த்தி, ஆதி திராவிடர்களுக்கு (பறையர்கள்) எதிராக அணிதிரட்டியத்தை போல தென் தமிழகத்திலும் தேவேந்திர குல வேளாளருக்கு (பள்ளர்கள்) எதிராக முக்குலத்தோரை அணிதிரட்ட எண்ணுகிறார். அவருடைய முயற்சி எள்ளளவும் வெற்றி பெறாது. தென் தமிழக தேவேந்திரகுல மக்கள் ராமதாஸின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்தே அவரை ஏற்கனவே ஒதுக்கித் தள்ளினர். எனவே அவரது இந்த முயற்சியும் பலிக்காது. பா.ம.க.-வின் நரித்தனத்தை தென் தமிழகத்தில் காட்ட முற்பட்டால் அதன் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை புதிய தமிழகம் எச்சரிக்கிறது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மாண்புமிகு முதல்வரின் சுகந்திரதின உ ரையில் சுகந்திர போராட்டவீரர் மாவீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரர் புறக்கணிப்பு ...?..

......இன்று காலை சென்னையில் நடைபெற்ற சுகந்திரதின உ ரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் , சுகந்திர போராட்ட வீரர் மாவீரர் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களின் பெயரை திட் டமிட்டு , புறக்கணிப்பு செய்துள்ளார் .. சுகந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அனைத்து பெயர்களையும் கூறிய முதல்வர் அவரது ..உ ரையில் கட்டபொம்மன் , புலித்தேவன் , வா ..உ .. சி , முத்துராமலிங்கம் , தீரன் சின்னமலை என்று வரிசைபடுத்திய முதல்வர் மாவீரன் , சுந்தலிங்ககுடும்பனார் மட்டும் எப்படி மறந்து போனார்... ...கடந்த திமுக ஆட்சியில் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினரும் , புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்கு அரசு விழாவும் , கவர்னகிரியில் மணி மண்டபமும் , அவரின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வுதியமும் வழங்கப்பட்டன .. அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு விழா நடத்தப்படவில்லை , சுந்தரலிங்கம் வாரிசுகள் அவர்களின் குல தெய்வ வழிபாட்டிக்கும் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது ...இப்படி திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன் ..... இந்த ஆட்சியின் சாதனைகள் 144 தடை உத்தரவுகளும், செயல்படாத 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்களும்தான்.. மற்றபடி தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா ..?

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி.....

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி ...தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும் .. தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன .. நாங்கள் மருத நில மக்கள் ... நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகபெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது ... எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன ... நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர் ... எம் மக்களின் சமுக , பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உ ருவாக்கப்பட்டன..... .....................நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன ... அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள் ..?..... .........கள்ளர் , மறவர் , அகமுடையர் எப்படி தேவர் ஆனார்கள் ..?... தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உ ள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள் ..?...ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள் , அதில் வெற்றியும் பெற்றனர் .. ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர் ...எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர் ... தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம் , யாரையும் அடக்கி , ஆண்டதாக வரலாறு இல்லை ..

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி.....

 பட்டியல் வெளியேற்றம் இன்று எம் மக்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது ... அதை நான் வரவேற்கிறேன் .... தனி தொகுதி உ ரிமைகள் பறி போனாலும் எங்களுக்கு கவலை இல்லை ... அண்ணல் அம்பேத்கார் அவர்களின் முயற்சியில் பூனா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு , இரட்டை உ றுப்பினர் தொகுதிகள் நடைமுறையில் இருந்தால் எம் மக்களின் கோரிக்கைகள் எப்போதோ நிறைவேற்றப்பட்டு இருக்கும் ... காந்தியின் உ ண்ணாவிரதத்தால் இவ்வுரிமை பறிபோனது ... தற்போது நடைமுறையில் இருக்கும் தனி தொகுதிகளால் எந்த நன்மையையும் கிடையாது ... அவர்கள் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், ஆதிக்க சக்திகளின் கைகூலிகள் அவ்வளவுதான் .....சாதி ஒழிய வேண்டுமானால் இந்து மதம் ஒழிய வேண்டும் .. அதன் வர்ணாசிரம தத்துவம் ஒழிய வேண்டும்... இது தற்போது நடைமுறை சாத்தியம் இல்லை .... இந்து மத தத்துவம் தனக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என்கிறது ... குறிப்பாக சாதிய படிநிலைகளை விட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுதான் அனைத்து இந்துக்களின் பார்வையும் உ ள்ளது.... SC மக்கள் என்று சொல்லுவதை எம்மக்கள் விரும்பவில்லை ... பிற்பட்ட பிரிவுகள்தான் அனைவரும் .... சமுக , பொருளாதார அளவுகோல் தான் முக்கியம் ... அதில் தேவேந்திர குல சமுகத்திற்கு உ ரிய பிரதிநிதித்துவம் பெறுவோம் ... பட்டியல் சாதிகளில் 76 பிரிவுகள் உ ள்ளது .. ஒவ்வொரு சமூகமும் தனித்த வரலாறு , பண்பாடு கொண்டவை .... மற்ற பிரிவினர் சாதி மறுப்பு திருமணம் செய்கிறார்களா ..?... ஏன் பட்டியல் சமுகத்தில் மட்டும் எதிர்பார்கிறீர்கள் ..?..... மற்ற பிரிவினரும் இடஒதுக்கீட்டு உ ரிமையை அவர்களும் பெறுகின்றனர் ... ஆனால் அவர்கள் பிற்பட்ட வகுப்பினர் , நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியா ..?.... இந்த அளவுகோல் மாற்றப்பட வேண்டும் ... சமூகங்களை சமூகமாக பார்க்க வேண்டும் .. சாதியாக அல்ல ..

. மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும்

வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். தற்போது எமது சமுகத்தின் முக்கியமான கோரிக்கை ' " தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை " தான் ... வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தேவேந்திரகுல மக்கள் தங்களது அடையாளத்தை மீட்கும் இவ்வேலையில் தீக்கதிர் போன்ற பத்திரிக்கைகள் பெயர் மாறினால் மாற்றம் வருமா ..?.. என்பது போன்ற ஆராய்சிகள் தேவையில்லை என்று கருதுகிறேன் .. அப்படி விவாதிப்பதாக இருந்தால் வாருங்கள் விவாதிப்போம் .. தீண்டாமை கொடுமைக்கு ஆளான சாணார் சமுகம் நாடார் ஆக மாறியது எப்படி ..?.... அவர்களுக்கு சமுக அங்கீகாரம், அரசியல் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறதே ..?..... சக்கிலியர் , மாதாரிகள் " அருந்ததியர் " ஆனதும் 3% உள் இட ஒதுக்கீடு பலனை அனுபவிப்பதும் கம்யுனிஸ்டுகளுக்கு தெரியாதா ..?.... மீண்டும் சொல்கிறேன் தோழமையோடு நீங்கள் வர்க்க ஆராய்ச்சி செய்யுங்கள் ... எங்கள் சமுக விடுதலையில் யாருடைய ஆதரவும் , எதிர்ப்பும் தேவையில்லை .... மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும் 

. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளார் ... ..பூமணி

.பூமணி ....தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லப்படும் பள்ளர் [அல்லது மள்ளர்] சமூகத்தைச் சேர்ந்தவர். தேவேந்திரர்கள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதனால் பூமணியை தலித் எழுத்தாளர் என்பது வழக்கம். ஆனால் இவ்வகை அடையாளங்களை முழுக்க நிராகரிக்கக்கூடியவராகவே எப்போதும் பூமணி இருந்திருக்கிறார். ”தலித் என்ற வார்த்தை எனக்கு அன்னியமானது. அந்த வார்த்தைக்கு ஒடுக்கப்பட்டவன் என்ற அர்த்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தச்சாதியில்தான் ஒடுக்கப்பட்டவன் இல்லை? எல்லாச்சாதியிலும் ஒடுக்குகிறவனும் ஒடுக்கப்பட்டவனும் உண்டு. ஆனால் அந்த வார்த்தை குறிப்பிட்ட சில சாதிகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதற்காக முன்வைக்கப்படுகிறது. இதில் ஓர் அசிங்கமான உள்நோக்கம் உண்டு
அன்றைக்கு சூத்திரனுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தவன் பின்னர் ஒரு புண்ணியவானின் கருணையால் அரிசனன் ஆனான்,அப்புறம் பட்டியல்சாதிக்காரன், தாழ்த்தப்பட்டவன், ஆதி திராவிடன் என்று மாறினான். இன்று தலித் கூட்டில் அடைத்திருக்கிறார்கள்,.....எங்கள் சமுக அடையாளம் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் என்பதே ...... சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளார் ... ..பூமணி .

பட்டியல் சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாதை வந்து விடுமா? இழிவு நீங்கிடுமா ? ...கம்யு னிஸ்டுகளுக்கு தோழர் ரகுபதி பாண்டியனின் பதில் ..

. .
பட்டியல் சாதிகளில் (SC) சேர்க்கப்படுவதற்க்கு முன் மள்ளர்களுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கத்தானே செய்தது. ஆசாரி, பூசாரிஉஉள்ளிட்ட பல சாதியினரும், பல்வேறு சாதிகளைச் சார்ந்த களத்து வேலை செய்தவர்களும், காவல் வேலை செய்தவர்களும் மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டு விட்டுத்தானே வேலை செய்தார்கள்.
அந்த நிலை எப்போது மாறியது?
பட்டியல் சாதிகளில் மள்ளர்கள் சேர்க்கப்பட்டபோதுதானே! " சர்க்காரே பள்ளர்களை கீழ்ச்சாதி என்று சொல்லிவிட்டது " எனக்கூறி மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டு வேலை செய்து வந்த. சாதிகளெல்லாம் மள்ளர்களை விட்டு விலகிச் சென்றனர்.
இது தானே 1935 - இல் நடந்தது. அப்படியானால் அந்த பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறும் போது மள்ளர்களுக்கு மீண்டும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெருவதில் என்ன தடை இருக்க முடியும். அதில் என்ன சந்தேகம் ?
மள்ளர்களின் சுயத்தை அழித்து மள்ளர்களை அரிசனனாக, ஆதி திராவிடனாக, தாழ்த்தப்பட்டவனாக, தலித்தாக காட்டி வருவது பட்டியல் சாதிகள் (SC) என்னும் ஆளவந்தார்களின் புதிய வர்ணாசிரமம் கோட்பாடாகும்.
ஆக பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறும்போதுதான் மள்ளர்கள் தங்களின் அடையாளத்தைப் பெற முடியும். சுய அடையாளத்தை பெற்றால்தான் சுய மரியாதையையும், சுய ஆட்சியையும் பெற முடியும்.
முன்னேற்றம் என்பது ஒரு சிலர் அரசு வேலைக்குச் செல்வதல்ல. எத்தனையோ வேறு பல அம்சங்கள் உள்ளன. அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாயிருப்பது இந்தப் பட்டியல் சாதி அடையாளம் தான். ஆகவே, பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறினால் உறுதியாக முன்னேற முடியும்.

பாஜக ஆதரவாளர் திருமதி பானுகோம்ஸ் அவர்களின் மதிப்பீடு ..?

 ..தென் தமிழகத்தில் மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் சமுகத்தின் போராட்டம் என்பது தீண்டாமை யோடு தொடர்புடையது அல்ல ... அவர்கள் தங்களின் வரலாற்று , பண்பாடு , சமுக வாழ்வியல்க்கான போராட்டம் .. அவர்கள் மீது திணிக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே விரும்புகின்றனர் .. அவர்களின் விருப்பத்திற்கு எதிராக பட்டியல் சமுகத்தில் தேவேந்திரர் சமுகத்தை இணைத்ததால் வந்த வரலாற்று பிழை .. மற்றபடி உ ணவளிக்கும் சமுகம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுப்ப கடமைப்பட்டுள்ளேன் .. அவர்களின் கோரிக்கைகள் முழுமையாக பரிசிலிக்க வேண்டும் என்பதை மத்திய , மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் கருத்து 

இடதுசாரி ஆதரவு நாளேடு தீக்கதிர்க்கு சவால் ..?... என்னோடு விவாதிக்க தயாரா ..?....

.........................................இடது சாரி தத்துவத்தை எப்படி நடைமுறைபடுத்த வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் வாருங்கள் விவாதிப்போம் ... அதை விடுத்தது எம் மக்களின் 60, ஆண்டுகால போராட்டத்தை கொச்சை படுத்தும் விதத்தில் தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் .. இந்தியாவில் சாதிகள்தான் வர்கங்களாக உ ள்ளது .. இந்த அடிப்படை அறிவு கூட தங்களுக்கு இல்லையா ..?.. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தெளிவாக வரையறுத்துள்ளார்கள் ... இருந்தும் கூட தொழிலாளி வர்கத்தின் விடுதலைக்காக 8 மணி நேர வேலை , தொழிற்சங்கம் போன்ற எண்ணற்ற கொள்கைகளை நடைமுறைபடுத்திய மார்சியவாதி அண்ணல் அவர்களை சாதி வட்டத்தில் அடைத்தார்கள் தானே கம்யுனிஸ்டுகள் .. எங்களுக்கு நீங்கள் எதிரிகள் அல்ல . சமுக எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் ..நாங்கள் பிறவி கம்யுனிஸ்டுகள் எந்த தத்துவம் எங்களை விடுதலை செய்யும் என்பதை நாங்கள் அறிவோம் .. தேவையில்லாமல் நீங்கள் தலையிட வேண்டாம் என்பதே எமது கருத்து .. மற்றபடி தேவேந்திரர்கள் விடயத்தில் நீங்கள் தேவையில்லா மல் நீங்கள் தலையிடுவீர்கள் என்றால் அதற்க்கான கொள்கை பலமும், இடதுசாரிகளின் சாதி அரசியலும் தேவேந்திர மக்களுக்கு இழைத்த துரோகமும் தொடர்ந்து வெளியிடப்படும் 

தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம்!! இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி:

தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம்!!
இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர்
டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி:
மதுரையில் அமிட்ஷா அவர்கள் கலந்துகொண்ட "தேவேந்திரகுல வேளாளர்" அரசு ஆணைக்கான மாநாட்டை வரவேற்கிறேன். கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுத்த அமிட்ஷா அவர்களை பாராட்டுகிறேன். 
மற்றபடி அவர்களின் நோக்கம் எப்படி இருந்தால் என்ன? தேவேந்திர குல மக்கள் புதிய தமிழகம் கட்சியால் அரசியல்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்றிவிட முடியாது.
தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும். தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன. நாங்கள் மருத நில மக்கள். நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகப்பெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது. எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர். எம் மக்களின் சமுக, பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உருவாக்கப்பட்டன.
நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள்? கள்ளன் மறவன் எப்படி தேவர் ஆனார்கள் தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள்? ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள், அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு அன்று வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர். எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர். தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம், யாரையும் அடக்கி, ஆண்டதாக வரலாறு இல்லை .

பட்டியல் வகுப்பினர் {SC } பட்டியலில் ஒரு சமுதாயத்தை சேர்ப்பதற்கான காரணங்கள் ..

..
1: மாட்டு இறைச்சி உண்பவர்கள்
2: தீண்டத்தகாதவர்களாக ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள்
3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள்..
4. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்..
5. வறுமையில் உழன்றுகொண்டு SC பட்டியலில் இருப்பவர்கள்..
6.இறந்தவர்களை புதைப்பதை தொழிலாக கொண்டவர்கள்
மேற்கண்ட வரைமுறைகள் தேவேந்திரர் சமுகத்திற்கு பொருந்துமா ..?
1. விவசாயத்தை குலதொழிலாக கொண்டு மாடுகளை உழவு எந்திரமாக பயன்படுத்தும் தேவேந்திரர்கள் ஒரு போதும் மாட்டிறைச்சியை உண்பதில்லை...
2. தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே தேவேந்திரர்கள் தான். ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர், சானார், சக்கிலியர் போன்ற இன்னும் சில மக்களுக்காக. தேவேந்திரர்களுகாக அல்ல...
3. தேவேந்திரர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள்....
4. பூமி பூஜை முதல் திதி வரையுள்ள அனைத்து தேவேந்திரர்களின் சுப/கெட்ட நிகழ்வுகளிலும் பிராமணர்களை தேவேந்திரர்களின் வீடுகளிலும் பூஜைகளிலும் பார்க்கலாம்
5. இன்றைய தேவேந்திரர்களின் பொருளாதார நிலை பல சாதி இந்துக்களின் நிலையைவிட பன்மடங்கு உயர்நிலையிலையே இருக்கிறது அது போக தேவேந்திரர்களின் உட்பிரிவுகளான மூப்பர் (BC 65) , காலாடி (BC 35) (DNC 28), பண்ணாடி (MBC 16) இல் இருக்கிறார்கள எனவே பட்டியல் இனத்தில் இருப்பதனால் மட்டுமே தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருக்கிறார்கள் என்றால் எம் உட்பிரிவுகள் எல்லா பிரிவுகளிலும் இருக்கும் போதே தெரியவில்லையா தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல என்று...?.... எங்களுடைய ஆதரவு இல்லாமல் பட்டியல் இனத்தில் சேர்த்ததே ஒரு மோசடி ..... பள்ளர் , குடும்பர் , காலாடி , பண்ணாடி , மூப்பர் ., தேவேந்திர குலத்தான் ஆகிய பிரிவுகளை இணைத்து " தேவேந்திர குல வேளாளர் "... என அரசு ஆணை வெளியிட இந்த அரசுக்கு என்ன தயக்கம் ..?...

"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொக்கிசங்கள்"..

....1930 கிழக்கு ராமநாதபுரத்தில் மறவர் சாதியார் கூடி பறையர் சக்கிலியருக்கு விதித்த சமூகக் கட்டுப்பாடுகளை தேவேந்திரருக்கும் புகுத்த முனைந்த போதுதான் பெருங்கலகம் துவங்கியது.
நாயக்கர் ஆட்சியையும் அவருக்குத் துணையாகவும் விசுவாசியாகவும் இருந்த கள்ளர்களை எதிர்த்து 1529 முதலே இவர்கள் போராடி வருகிறார்கள், கடந்த 470 ஆண்டுகளாக நடந்து வரும் இம்மோதலில், இரு சாதியிலும் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம்.
1881, 1891 ஆகிய இரு குடிக் கணக்கெடுப்பிலும் தேவேந்திர குல வேளாளர்களை வேளாண்குடிச் சமூகம் (Agricultural Class) என்று பொது சமூகக் கணக்கில்தான் சேர்த்துள்ளார்கள். 1901ம் ஆண்டு குடிக் கணக்கெடுப்பிலிருந்து தான் 'பள்ளன்’ என்ற ஒரு தனிச் சாதிக்கணக்கு ஆவணங்களில் உள்ளது.
நாயக்கராட்சிக்குப் பின் வரி வசூல் உரிமையிலும், கிராம ஆதிக்கத்திலும் இருந்த சமீன்தார்களை எதிர்த்து இவர்கள் நடத்திய போர் ஒரு தனி வரலாறாகும். தமிழ் நாட்டு கிராமீயப் பாடல்களில் இவ்வரலாறு பொதிந்து கிடக்கிறது. செல்லாயிபுரம் தமிழ்ச்செல்வன் எழுதிய ஒரு கட்டுரையில் தேவேந்திரருக்கும் போடி, தேவாரம் ஆகிய இரு சமீன்களுக்கும் தொடர் பகை இருந்ததாகவும் இதனடிப்படையில் எழுந்த மோதல்களில் இச்சமூகத்தார் இரு சமீன்களையும் தாக்கிப் பலரைக் கொன்றதாகவும், அரண்மனைக்குச் சொந்தமான பல கட்டங்களை இடித்துத் தகர்த்ததாகவும் இம்மோதலில் ஏராளமான தேவேந்திரரும் சமீன் படை வீரர்களும் மடிந்ததாக உள்ள செய்தியைக் கொடுத்துள்ளார். இதே போல் நெல்லை மாவட்டத்திலும் நடந்துள்ளது. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் முழுவதை அலசி ஆராய்ந்தால் இதுபோல் மேலும் பல செய்திகளைக் கண்டுபிடிக்க முடியும்,
பள்ளன் என்ற பெயர் சதி செய்து திணிக்கப்பட்ட பிறகும், தேவேந்திரகுலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, ஆகிய குல உயர்வுப் பெயர்களில் தங்கள் சாதிப் பெயரை லட்சக் கணக்கானோர் பதிவு செய்துள்ளார்கள். 1971 குடிக் கணக்கெடுப்பில் 13 லட்சம் பேர் பள்ளன் எனற பெயரிலும், மற்ற குலப் பட்டப் பெயர்களில் 8 லட்சம் மக்களும் பதிவு செய்துள்ளார்கள். இப்பெயர்கள் எல்லாம் இப்பொழுதும் எஸ்.சி. அட்டவணையில் உள்ளன.
1938 ல் காந்தி அரிசன சேவா சங்கம் ஆரம்பித்தார், இச்சங்கம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட மதுரை சேவாலயம் மாணவர் விடுதியைத் திறக்க வந்த ராசாசியை எதிர்த்துப் போரிட்டது தேக்கம்பட்டி அஞ்சா நெஞ்சன் பாலசுந்தரராசு மட்டுமே. அட்டவணைச் சாதிக் குழந்தைகளை அடிமை வழிக்குப் பக்குவப்படுத்தும் இம்முயற்சியைத் தமிழ்நாட்டில் எதிர்த்த ஒரே தலைவர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசாகும்,

"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொக்கிசங்கள்"....

.....1939 ல், மதுரை மீனாட்சி கோயிலில் நடந்த அரிசன ஆலயப் பிரவேசத்தில் பறையர், நரடார் ஆகிய இரு சாதியார் மட்டுமே கலந்தார்கள். தேவேந்திரர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு ஆதரவு தருமாறு பாலசுந்தரராசைக் கூப்பிட வந்த வைத்தியநாத அய்யருக்கும் பாலசுந்தரராசுக்கும் மதுரை மங்கம்மாள் சத்திரம் அறை எண். 7 - ல் பெரிய வாக்குவாதம் நடந்துள்ளது, (அரிசன ஆலயப் பிரவேசத்தில் கலந்து கொண்டவர்கள், 1, தும்பைப்பட்டி கக்கன், 2. உசிலம்பட்டி முத்து 3. மதிச்சியம் சின்னையா, 4, ஆலம்பட்டி முருகானந்தம், 5.விராட்டிபத்து ஆவலிங்கம், 6. விருதுநகர் சண்முக நாடார். இதில் 5. பேர் பறையர், ஒருவர் நாடார்.)
1947 -ல், ஏ,பி. ராமசாமி செட்டியார் காலத்தில் கூர்மையா கமிட்டி என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் நோக்கம் அரிசன மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு கோடியை எப்படிச் செலவு செய்வது என ஆய்வு செய்து அறிக்கை தருவதாகும். இக்குழு பள்ளர்களுக்கு இப் பணத்திலிருந்து எதுவும் செலவு செய்ய வேண்டியதில்லை. அவர்கள் நல்லநிலையில் உள்ளார்கள் என்ற கருத்தை வெளியிட்டது, அதாவது, இவர்கள் தீண்டாமை அனுபவிக்கும் மக்கள் அல்ல என்ற கருத்தை வெளியிட்டது, .
கூர்மையா கமிட்டியில் மொத்தம் 27 பேர் இருந்தார்கள். இவர்களில் தேவேந்திரர் ஒருவரும் இல்லை. அக்காலக் கட்டத்தில் தேவேந்திர குல வேளாளரில் அஞ்சாநெஞ்சன் பாலசுந்தரராசு ஆயக்குடி எசு.சி பாலகிருட்ணன், திட்டை சுப்ரமணியன், தொண்டு வீராச்சாமி, ஆர். எசு. ஆறுமுகம், பெருமாள் பீட்டர் வீரம்பல் வேதமாணிக்கம், சொக்கலிங்கம், சிவக்கொழுந்து, டி. ட்டி. ராசன், ஜி.ஏ. ஞானசுப்பிரமணியன், மேலக்கால் வீரபத்திரன் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்தார்கள். இவர்களில், தேக்கம்பட்டித் தலைவரைத் தவிர, மற்றவர் காங்கிரசுக்காரர்கள் ஆனால், யாருமே கூர்மையா கமிட்டியில் சேர்க்கப்படவில்லை.
இதற்குக் காரணம் இவர்கள் எல்லோரும் சரிகை வல்லவெட்டு அணிவார்கள். இது சமீன்தார், தோரணையாகும்.
எனவே யாரையும் சேர்க்கவில்லை. பொது வாழ்க்கைத் தலைவர்களை விட்டு, விட்டு அரசு அதிகாரிகளை எடுத்துக் கொண்டாலும் கூர்மையா கமிட்டி அமைக்கப்பட்ட போது தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த 48 கெசடட் அதிகாரிகளாக இருந்தார்கள் என்று தெரிகிறது. இவர்களில் யாரையாவது கமிட்டியில் சேர்த்திருக்கலாம், ஆனால் சேர்க்கவில்லை.
ஆக, இந்தியாவில் பல மாநிலங்களின் எஸ்.சி, எஸ்.டி, பட்டியலை ஆய்வு செய்தால் நாட்டின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள், ஆரியக் கலாச்சாரத்தோடு கலக்காதவர், ஆரிய இனவழி அதர்மக் கொள்கைகளை எதிர்த்துப் போரிட்டவர், இப்படிப்பட்ட சாதி - சமூகங்களையெல்லாம் இப்பட்டியலில் சேர்த்திருப்பதைக் காணலாம்.
அதே சமயம் ஆரிய பார்ப்பன இனவழியை நிலைநாட்ட அவர்களுக்குத் துணையாகவும், அடியாட்களாகவும் இருந்த சாதிகள் எல்லாம், அவர்கள் எத்தனை துறைகளில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இப்பட்டியலில் இல்லாமல் இருப்பதையும் காணலாம்.-

சங்கராபுரம் கலவரம் ....புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு................டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A .,

''சங்கராபுரம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, புதிய
தமிழகம் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என, கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A ., அவர்கள் .கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவின்போது, ஆதி
திராவிடர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில், துரை ஈஸ்வரன் கொலையில் தொடர்புடையவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்யாவிடில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
'பாகுபலி' படத்தில் பகடை எனும் சமுதாயத்தினருக்கு எதிரான சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதை நீக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும், 48 மணி நேரத்துக்குள் வசனங்களை நீக்காவிடில், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

தேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம் – பேராசிரியர் பெ. தங்கராஜ், MA. M.phil...(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )


மள்ளர்கள் (தேவேந்திரர்கள்) எஸ்.சி. பட்டியலிலிருந்து விலகுதல்
எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் படிக்க முடியாது, வேலைக்குப் போகமுடியாது என்கிற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மேலும் சில வாதங்கள் வருகின்றன. இதையொட்டி வருகிற வாதங்களைக் கீழ்கண்டபடி தொகுக்கலாம்.
1. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் படிக்க முடியாது, சலுகை என்ன ஆவது?.
2. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் வேலைக்குப் போக முடியாது, ஒதுக்கீடு என்ன ஆவது?
3. இது, ஏற்கனவே படித்து வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் வாதம். இனிவரும் தலைமுறை என்ன ஆவது?
4. யாரைக் கேட்டு – எந்த அடிப்படையில் தேவேந்திரரை எஸ்.சி. அட்டவணையில் சேர்த்தார்கள்? எனக் கேட்பவர்கள், யாரைக் கேட்டு – எந்த ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கச் சொல்கிறார்கள்?.
5. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் மதிப்பு மரியாதை வந்து விடுமா?. எஸ்.சி. பட்டியலை ஏன் இழிவாகக் கருத வேண்டும்.
6. ஏன் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும்.
1.முதல் வாதத்தை எடுத்துக் கொண்டால்
பட்டியலிலிருந்து விலகினால் படிக்க முடியாது என்பது தவறு. எஸ்.சி. பட்டியல் வந்தது 1935 ல் தான். அதற்குமுன் இவர்களில் யாரும் படிக்கவில்லையா?, அரசு, தனியார் பள்ளிகளில் இவர்களில் பலர் படித்தார்கள். கிறித்துவ மிசனரிகள் ஆரபித்த பள்ளிகளில் பலர் படித்தார்கள். மதப் பரப்பல் நோக்கமாக இருந்தாலும், படிக்க வாய்ப்புத் தரப்பட்டது. பல சாதிக்காரர்கள் படிக்காமல் இருந்த காலத்திலேயே இவர்கள் படிப்பில் நாட்டம் காட்டினார்கள்.
அடுத்து, படிப்பு என்பது, ஆர்வம் ஈடுபாடு காரணமாக வரவேண்டும். ஒதிக்கீடு மூலம் வர முடியாது. உதாரணமாக கள்ளர் சமூகத்தைத் திருத்துவதற்காக அரசு கள்ளர் சீரமைப்பு ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்தில், இதற்காக ஒரு தனி துணை மாவட்ட ஆட்சியர் உள்ளார். ஆனால் கள்ளர்கள், சரிவர இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்பள்ளிகளில் இன்று வேறு சமூகக் குழந்தைகளே அதிகம் படிக்கிறார்கள். தேவேந்திரர் கல்வி அளவைவிட சுமார் 15 விழுக்காடு குறைவாயுள்ளது என்று முக்குலத்து சமூகத் தலைவர்களே கூறுகிறார்கள். இத்திட்டம் அறவே தோல்வியடைந்து விட்டது. இத்துறை சார்ந்த பணியாளர்களையோ அல்லது இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரையோ கேட்டால் இது பற்றிய விபரங்களைக் கூறுவார்கள். இதற்குக் காரணம் என்ன?. அரசுத் திட்டங்கள் – சலுகைகள் இருந்தும் அச்சமூகத்தார் படிப்பில் இன்னும் கவனம் செலுத்தவில்லை. திட்டம் உள்ளது, ஆனால் சமூகத்தார் நாட்டம் இல்லை. மேலும் கல்வி மண்டலத்திற்கே வராத பல சாதிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இதே போல் நரிக்குறவர்களைப் படிக்க வைக்க அரசு எத்தனையோ திட்டங்கள் தீட்டிச் செயலில் இறங்கியது. இவர்களுக்காக மதுரை, மேலூர், நத்தம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் விடுதிகளை மூடிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
இன்னொரு முக்கிய செய்தியைக் கவனிக்க வேண்டும். அரசுக் கணக்கு அறிக்கைகளின்படி யாராவது பள்ளியில் சேர விரும்பினால் ‘இடமில்லை’ என்று மறுக்கும் நிலை தமிழ்நாட்டில் உள்ளதா? இல்லையே! இதற்கு மாறாக இடை நிறுத்தம் (Drop out) இருப்பதைப் பற்றித்தான் குறிப்பு உள்ளது. 10, 12,ம் வகுப்பிலும், அதற்கடுத்து கல்லூரியில் சேரும் போதும் இது போன்ற இடை நிறுத்தம் அதிக அளவில் உள்ளதாகவும், இது 10 முதல் 15 விழுக்காடு வரை உள்ளதாகவும் குறிப்புகள் காட்டுகின்றன. இது நாம் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த காலங்களில் இதை நன்கு அறிவோம். எப்படியெனில், பல கல்லூரிகளில் சேர்க்கை முடிந்து விட்டது, இடமில்லை என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், தமிழக கல்லூரிக் கல்வியில் 7, 8, 9 விழுக்காடு இடங்கள் காலியாகவே இருந்தன. இப்பொழுதும் அப்படிதான். இந்த புள்ளி விபரங்களை வெளிப்படுத்தினால் சேர்க்கை சமயம் நன்குடை பெற முடியாது. பணம் பறிக்க முடியாது எனக் கருதி வெளியிடுவது கிடையாது. அப்படியிருக்கும் போது படிக்க முடியாது என்று எப்படி கூறமுடியாது.
அடுத்து, எஸ்.சி. பட்டியலில் இல்லாத இந்து நாடார், கள்ளர், மறவர், வன்னியர், இசுலாமியர், மீனவர், முத்தரையர், கைவினைஞர்(விசுவகர்மா), வண்ணார், அம்பட்டர்(நாவிதர்) ஆகியோர் பழங்காலத்திலும் சரி இப்பொழுதும் சரி, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தேவேந்திரர் அளவிலிருந்து குறைவாகவே உள்ளார்கள். ஆனால் இவர்கள் எஸ்.சி. அட்டவணையில் சேர்க்கவில்லை. எஸ்.சி பட்டியல் உருவானது கல்வியில் பிற்போக்காக இருந்தவருக்குக் கல்வி தருவதற்காக என்றால் இவர்களையல்லவா முதலில் சேர்த்திருக்க வேண்டும்! இதிலிருந்து தெரியவில்லையா எஸ்.சி பட்டியல் உருவானதின் நோக்கம் அதுவல்லவென்று.
இனி, கல்வி உதவிப் பணத்தைக் கூறுவார்கள், இது எல்லோருக்கும் உள்ளது. 28 முற்பட்ட சாதிகள் தவிர எல்லோருக்கும் சாதிகள் தவிர எல்லோருக்கும் உள்ளது. விடுதிகள் எல்லோருக்கும் உண்டு. பயணச் சலுகை எல்லோருக்கும் உண்டு. கற்கைக் கட்டண விலக்கு சிலருக்கு முழுவதும், சிலருக்கு பாதியும் உண்டு. எனவே இதெல்லாம் அனுபவிப்பது எஸ்.சி அட்டவணைச் சாதியார் மட்டும்தான் என்று கூறுவது சரியல்ல. மாணவர் சலுகைகள் அனைத்துச் சாதிகளுக்கும் உள்ளன.
2. அடுத்து, வேலை வாய்ப்பு பற்றிக் கூறுகிறார்கள்.
எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் வேலைக்குப் போக முடியாது என வாதிடுவது சரியல்ல. 1980 முதல் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நிலை அல்லது இருந்த நிலை, மற்ற பட்டியல் சாதிகளைவிட எஸ்.சி. பட்டியல் சாதியார் மத்தியில்தான் கூடுதலாக இருந்த்து. இதற்குக் காரணம், மற்றவர்களுக்குத் தனியார் துறை வாய்ப்புகள் உள்ளன. எஸ்.சி. அட்டவணை சாதியாருக்கு அது அறவே அல்ல.
அரசு வேலை என்ற சில எழும்புத் துண்டுகளைக் காட்டி இவர்கள் அரிசன், தாழ்த்தப்பட்டவன், தலித் என்று ஒதுக்கி வைக்கவும் அழுத்தி வைக்கவும் தான் இப்படியல் பயன்படுகிறது. தனியார்துறை வேலை வாய்ப்பையும், அரசுத்துறை வேலை வாய்ப்பையும் ஆய்வு செய்தால் இந்த உண்மையைக் கண்டுபிடிக்கலாம். சரி, அரசுப் பணி வராமல் இருந்த காலத்தில் இவர்கள் எல்லாம் செத்து விட்டார்களா? எத்தனை பேர் அரசுப் பணிக்கு வருகிறார்கள்? ஊருக்கு 4, 5 பேர் வருகிறார்கள். இவர்களை வைத்தா சமூக முன்னேற்ற எழுச்சியைக் கணக்கிடுவது?. சரி அரசு பணியைக் கணக்கில் எடுத்தால்கூட தேவேந்திரர் இன்று ஏராளமானோர் அரசுப் பணிக்கு வந்துவிட்டார்கள். இந்து நாடார், கள்ளர், மறவர், வன்னியர், இசுலாமியர், மீனவர், முத்தரையர், கைவினைஞர்(விசுவகர்மா), வண்ணார், அம்பட்டர் ( நாவிதர் ) இவர்களைவிட எண்ணிக்கையிலும், விழுக்காட்டுக் கணக்கிலும் அதிகம் வந்துவிட்டார்கள். ஆனால் இதுவே மற்றவரின் காழ்ப்புணர்வுக்குக் காரணமாயுள்ளது. எஸ்.சி. அட்டவணையில் இருந்து கொண்டு இவ்வளவுபேர் வந்து விட்டார்களே! என்று வயிற்றெரிச்சல் படுகிறார்கள். இக்காழ்ப்புணர்வில் எல்லோருமே இவருக்கு எதிராகக் களத்தில் இறங்குகிறார்கள். எஸ்.சி. பட்டியலில் இல்லாவிட்டால் இந்த அளவுக்குக் காழ்ப்புணர்வு ஏற்படாது.
( தொடரும் ) .(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )

தேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம் – பேராசிரியர் பெ. தங்கராஜ், MA. M.phil.....(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )


மள்ளர்கள் (தேவேந்திரர்கள்) எஸ்.சி. பட்டியலிலிருந்து விலகுதல்
6. அடுத்து, யாரைக் கேட்டு தேவேந்திர குல வேளாளரை எஸ்.சி. அட்டவணையில் சேர்த்தார்கள். அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? எனக் கேட்பவர், யாரைக் கேட்டு எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார் என்று சிலர் கேட்கலாம்.
அப்படிப்பட்டவர்களுக்குக் கூறுகிறோம். இந்திய சுதந்திரப் போராட்டம் யாரைக் கேட்டு நடந்தது? எத்தனை பேருக்கு அதில் ஈடுபாடு இருந்தது? இருப்பினும், சுதந்தரப் போராட்டம் நடந்தது, சுதந்நிரமும் வந்தது. தலைவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு கொண்டிருந்தனர்.
பெரியார், அம்பேத்கார், ராம் மனோகர் லோகியா போன்ற பெருந்தலைவர்கள் இந்தியாவுக்குக் சுதந்திரம் தருவதை தள்ளிப் போட வேண்டும். சமூகக் கொடுமைகளை ஒழிக்கும் பணியை பிரிட்டிஷ் அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டு சைமன் குழுவிடமும், கிரிப்ஸ் குழுவிடமும் மனுக் கொடுத்ததை நாடறியும். நாட்டில், பல முக்கிய சாதிகள், குறிப்பாக நாடார், சாமார், யாதவ், மாலா, மாதிகா, ஆதிதிராவிடா (பறையர்), தேவேந்திரர், புலையர், ஈழவர் ஆகியோர் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிக் கவலைப்படவில்லை, மாறாக, சுதந்திரம் கிடைத்தால், வெள்ளைக்காரர்கள் இருக்கும் இடத்தில் பார்ப்பனரும் மற்ற 5 - 6 சாதிக்கார்களும் அதிகாரத்தைப் பெறுவார்கள். கொடுமைகள்தான் அதிகமாகும் எனத் கருதினார்கள். இதே காரணத்தைக் கூறியதற்காக நீதிக் கட்சிக்காரர்களையே ‘தேசத் துறோகிகள்’ என்றுதான் கூறினார்கள்.
1885 ல் காங்கிரஸ் கட்சியை இரண்டு பேர்கள்தான் ஆரம்பித்தார்கள். அந்த இருவரும் வெள்ளைக்காரர்கள். தி.மு.கா. வை 7 பேர்கள் சேர்ந்துதான் ஆரம்பித்தார்கள். பெரும் புரட்சியை ஒரு சிலர்தான் நடத்த முடியும். புரட்சிக் கருத்துகளை ஒரு சில அறிஞர்கள்தான் கூறமுடியும்.
தமிழ்நாடு முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் தங்களை எஸ்.சி அட்டவணையில் சேர்த்ததைப் பற்றி, கவலையில் மூழ்கியுள்ளார்கள். 'குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பரித்தது என்ற பழமொழிபோல், இப்போது தலித் என்று பேசுகிறார்கள். கேட்டால் சாதிகளை இணைக்கிறோம் என்கிறார்கள். எஸ்.சி பட்டியல் இருக்கட்டும். முதலில் மற்ற பட்டியல் சாதிகளை ஏன் இனைக்கவில்லை? அல்லது இணையவில்லை? யார் வேண்டுமானாலும் எஸ்.சி. யாக, தலித்தாக இருக்கட்டும். நாங்கள் தமிழர், எனவே, தமிழனாகவே இருக்க விரும்புகிறோம்.
7. அடுத்து, தேவேந்ரகுல வேளாளர் எஸ்.சி. அட்டவணையிலிருந்து வெளியேறினால் முன்னேற முடியுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் கூற விழைவது என்னவெனில், முன்னேற்றம் என்பது ஒரு சிலர் அரசு வேலைக்குச் செல்வதல்ல! எத்தனையோ வேறு பல அம்சங்கள் உள்ளன. அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாயிருப்பது இந்த எஸ்.சி. அட்டவணை.
பட்டியலை ஏன் இழிவாகக் கருத வேண்டும்? எனச் சிலர் கேட்கிறார்கள். இழிவு இல்லை என்பவர் ஏன் அவரே அப்பெயரை வைத்துக் கொள்ளட்டுமே!. என்கிறோம். மேற்குறிப்பிட்ட கருத்துக்களைக் கூறுவோர் ஒதுக்சீட்டை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார், மற்ற எந்த அம்சத்தையும் கணக்கில் எடுத்துத் சிந்திக்கவில்லை. வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் இந்த வாதமும் ஒருவகை சுயநலமாகும்.
இதுகாறும் எடுத்து ஆய்வு செய்த பிரச்சனைகளின் அடிப்படையில், கீழக்கண்ட இரண்டு செய்திகள் தெரியவருகின்றன, அனவ;
1. வெள்னளக்காரர்கள் டி.சி. பட்டியல் உருவாக்கியதன் நோக்கம், இந்தியாவில் அரசியலதிகாரம் ஒரு சில சாதிக்கரர்களிடம் குவிந்து விடாமல் தடுப்பதற்காக.
2. காங்கிரசும், மற்ற மேல் மட்டத்திலிருந்து சாதிக் காரர்களும் இப்பட்டியலைப் பயன்படுத்திய விதம் நேர்மாறானது. யார் யாரை நிரந்தரமாய் அ|ழுத்த எண்ணினார்களோ, அவர்களையெல்லாம் இப்பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.
இச்சதியைச் செய்ததில், வந்தேரிகள் செய்த செயல்கள் நாட்டின் பூர்வீகக் குடிகளை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்துள்ளது. இங்கே வந்தேறிகள் என்பது இருவரைக் குறிக்கும் 1, இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்துகுடியேரியவர்கள். 2. இந்தியாவிலேயே ஒரு பகுதியிலிருந்து பிரிதொரு பகுதியில் குடியேறியவர்கள்
உதாரண்மாக. தமிழகத்திற் குடிபுகுந்த தெலுங்கு, கன்னட மலையாள் சாதிகள், மராத்தி நாட்டில் குடிபுகுந்த குஜராத்திகள், கர்நாடகாவில் குடிபுகுந்த மராத்தியர்கள், வங்காளத்தில், குடிபுகுந்த பீகாரிகள்.
மராட்டிய மாநிலத்தின் பொருளாதார ஆதிக்கம் குஜராத்திகளிடம் உள்ளது. என்று அம்மாநிலத்தில் ஒரு குமுறல் உள்ளது.
எஸ்.சி. பட்டியல் உருவாவதற்கு முன், டி.சி பட்டியல் உருவாக்கிய போது அதில் மண்ணின் மைந்தர்களை சேர்க்கப்படக் கூடாது என்று வெள்ளைக்காரர்கள் விதி வகுத்ததிலிருந்து இதை உணரலாம் இந்தியத் துணைக் கண்டத்தில் மண்ணின் மைந்தர்களும் தொடர்ந்து பகை இருந்து வருவதை உணர்ந்ததால்தான் வெள்ளைக்கரர்கள் இது போன்ற விதியை வகுத்துள்ளார்கள். ஆனால் சமூகப் பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதனால்தான் 1857 ல் வெடித்த சிப்பாய் கலகத்திற்குப் பின் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். ( Non – Intervention Policy )
சமூகப் பிறச்சனைளில் தலையிடாக் கொள்கையைக் கடைபிடித்ததால் சாதி மத ஆபாச அறிவினங்களை வரிந்து கட்டி வளர்த்தார்கள். வருண (அ)தர்மத்தை வலுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ, அவையனைத்தையும் செய்தார்கள்.
(தொடரும்).....(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )

எழுதப்படாத சரித்திரம் ...{1}


‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’ ..எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நன்றி .. ..தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.
மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்..
காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள்.
நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.

எழுதப்படாத சரித்திரம் ...{2}


‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’ ..எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நன்றி ...மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.
இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.
‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.
நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?.....

எழுதப்படாத சரித்திரம் ...{3} ‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’ ..எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நன்றி

.....................................யார் இந்த தேவேந்திரன்?....
உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.
வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘
மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.
சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.

நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.
நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.
பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.
சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?
சரித்திரம் தொடர்கிறது....

செய்வீர்களா ...?.... நீங்கள் செய்வீர்களா ...?..... தேவேந்திரகுல வேளாளர் என அரசு ஆணை வெளியிடுவீர்களா...?....

 மதுரை, : சாதிகளை ஒருங்கிணைப்பதாக கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ...M .D .M .L .A ., அவர்கள் குற்றம் சாட்டினார். மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி..M .D .M .L .A ., அவர்கள் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முற்படுத்தப்பட்டோர் என பட்டியலிட்டு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர் உட்பட 6 பிரிவு சமுதாய மக்களை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். எங்களது கோரிக்கை தொடர்பாக 2011ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது கோரிக்கை வைத்தோம். இதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 6 கட்ட போராட்டம் அறிவித்து மதுரையில் முதற்கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் கூறினார்....

தேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்.....{1}... முதுகுளத்தூர் கலவரம் ....{2}... சமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

....1957 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் குறித்து உடனடியாக 1958 லேயே ஒரு கள ஆய்வு நூல் வெளிவந்துள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்தப் புத்தகம் கடந்த 49 ஆண்டுகளாக ஒரு மறு பதிப்புகூட பெறவில்லை. அ. ஜெகநாதன் முயற்சியால் யாழ்மை பதிப்பகத்துக்காக மறுபதிப்பு செய்யப்பட்டுத் தற்போது வெளிவந்துள்ளது. அதேபோல மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்’ வரலாற்றுப் பதிவும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த கூடுதல் வாசிப்புக்கு உதவுகிறது. தேவேந்திரர் விடுதலைக்கான போராட்டங்கள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்படும் இந்த காலகட்டத்தில் இவ்விரு புத்தகங்களும் முக்கியத்துவம் பெருகின்றன. முதுகுளத்தூர் கலவரம் பள்ளர்களுக்கு எதிராக மறவர்கள் நடத்திய கலவரம். 1957 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேவர் கை நீட்டிய வேட்பாளருக்கு வாக்களிக்காத பள்ளர்கள், நாடார்களுக்கு எதிராக வன்முறை ஏவப்படுகிறது. குறிப்பாக பள்ளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்லவேளையாக இம்முறை பாதிக்கப்பட்ட பள்ளர்களுக்காக வாதாட சமூக உரிமைப் போராளி இம்மானுவேல்தேவேந்திரர் இருந்தார்... இதனால் பள்ளர்கள் பலமாக இருந்த பகுதிகளில் மோதல்கள் பலமாக இருந்தது. இதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். இம்மானுவேல்தேவேந்திரர் இருந்தார். இன்னும் காங்கிரஸ் எம். எல். ஏக்களும், அதிகாரிகளும் இருந்தனர். பிரச்சனைக்குரிய இரு சமூகத்தவரும் சமாதானமாகப் போகவேண்டும் என்றுதான் ஆட்சியர் கூறினார். யார் மீது தவறு என்பதைக்கூட சுட்டிக்காட்டவில்லை. ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மனநிலை, குறிப்பாக மறவர் சமூகத்தவரின் மனநிலை எப்படி இருந்தது என்றால் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இம்மானுவேல்தேவேந்திரர் , முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமாக நாற்காலியில் அமர்ந்து பேசியதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதுமட்டுமல்ல தேவருக்கும், இம்மானுவேல் அவர்களுக்கும் கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.” கூட்டறிக்கை விடுவதென்று யோசனை கூறப்பட்டது. தேவர் அதற்கு சம்மதிக்கவில்லை. தேவேந்திரர்கள் சார்பில் இம்மானுவேலும், காங்கிரஸ் சார்பில் நாடார்களும் அறிக்கையில் கையொப்பமிடுவதை ஆட்சேபித்தார். தேவர் ... அப்போது முத்துராமலிங்கத் தேவருக்கும் இம்மானுவேலுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. ஒரே வாசகமுள்ள தனித்தனி அறிக்கைகளில் தனித்தனியாய் கையெழுத்திடலாம் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார். அதற்கும் தேவர் ஆட்சேபித்தார். ஆனால், ‘கையெழுத்திகிறீரா, இல்லையா?’ என்று கலெக்டர் கடுமையாகக் கேட்டதன்பேரில் தேவர் கயெழுத்திட்டார். கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளே, மறுநாள் 11ம் தேதி (செப்டம்பர், 1957) இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடியில் பஸ் ஸ்டான்டுக்குப் பக்கத்தில் இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டார்.” (முதுகுளத்தூர் கலவரம், பக்: 57) ..

தேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்.....{1}... முதுகுளத்தூர் கலவரம் ....{2}... சமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

.......சமாதானக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முத்துராமலிங்கத் தேவர், “இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அடுத்த நாள்தான் இம்மானுவேல் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்...இம்மானுவேல்தேவேந்திரர் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமே முதுகுளத்தூர் கலவரமாக விசுவரூமமெடுத்துள்ளது. இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட நாளிற்கு மறுநாள் பரமக்குடி அருகில் உள்ள அருங்குளத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. மறவர்களும், பள்ளர்களும் வாழும் இவ்வூரில் அன்று கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று மறவர்கள் கோரினர். இதற்கு பள்ளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. ஒரு பெண் உள்பட ஐந்து பள்ளர்கள் உயிரிழந்தனர். பள்ளர்களும் எதிர்த்துத் தாக்கினர். இதில் 5 மறவர்கள் இறந்தனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 58) தொடர்ந்து “இம்மானுவேலைக் கொலை செய்தவர்கள் கீழத்தூவலில் மறைந்திருப்பதாக போலிசுக்கு 14 ஆம் தேதி காலையில் தகவல் கிடைத்தது. .இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஆயுதப்படைக்கும் மறவர்களுக்கும் நடந்த மோதலில் 5 மறவர்கள் கொல்லப்பட்டனர்.(கீழ்த் தூவல் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் நடந்துகொண்ட முறை மனித நாகரிகமற்ற செயல். என்று கூறுகின்றனர் அங்கிருந்த மறவர்களின் கண்களையும், கைளையும் கட்டி ஓடவிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.) தொடர்ந்து கலவரம் கிராமம் கிராமமாகப் பரவியது. 18 ஆம் தேதியன்று வீரம்பல் கிராமத்தில் இருந்த பள்ளர் இன மக்கள் ஒரு கிறிஸ்தவக் கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். மறவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நடத்திய துப்பாக்கிச் சூடில் பலர் உயிழந்துள்ளனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 60). நிராயுதபாணிகளான தேவேந்திர குல மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை மிகவும் அவலமானது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் யாருக்கும் இத்தகைய வன்கொடுமைகள்தான் என்பது இந்திய வரலாற்றில் பதில்களாக அமைகிற்து என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்திக்கூறியது.

சமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்......

..............இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிலுள்ள செல்லூர் என்ற கிராமத்தில் தேவேந்திரர் (பள்ளர்) சாதியைச் சேர்ந்த சேது வாத்தியாருக்கும், ஞானசௌந்தரிக்கும் 09..10.1924 அன்று இம்மானுவேல் பிறந்தார். சேது வாத்தியார் கிறித்துவத்தைத் தழுவி வேதநாயகம் ஆனார். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியதால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். பள்ளிக் கல்வி முடித்த இம்மானுவேல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸில் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதம் சிறை சென்றுள்ளார். பின்னர் ஆயுதப் பலத்துடன் வெள்ளையரை விரட்டும் எண்ணத்துடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேரமுயன்றார். அதற்குள் நேதாஜி இறந்துவிட்டதால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், அமிர்தம் கிரேஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் மீண்டும் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவப் பணியில் இருந்து விடுப்பில் திரும்பியபோது முதல் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்திருந்தது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் முத்துராமலிங்கத் தேவருக்கு வாக்களிக்காத பிற சாதியினர் மீது மறவர்கள் வன்முறையை ஏவி வந்தனர். இதில் பெரிதும் தேவேந்திரர்கள் அதிகம் பாதிக்கப்படனர். இம்மானுவேல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பள்ளர்களின் அச்ச உணர்வைப் போக்கினார். நிலைமை மேலும் மோசமடையவே, இராணுவத்துக்குத் திரும்பாமல் முழு நேர சமூகப்போராளியானார். இதனால் அச்சத்தில் இருந்த மக்கள் இம்மானுவேல் தலைமையில் அணிதிரன்டனர். பள்ளர் சமூகத்தினரிடையே சமத்துவ உரிமை ஏற்பட உழைத்தார். தேவேந்திரர் குலச் சங்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் ஆகியவற்றின் பொருப்புகளை ஏற்றார். குறிப்பாக இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடினார். கக்கன் போன்றவர்களின் முயற்சியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், இம்மானுவேலின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் வழங்கவில்லை. என்றாலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சி அரசியலையும் பள்ளர்களுக்கு உதவும் நோக்கிலேயே பயன்படுத்தினார் என்று தெரிகிறது. தேவேந்திரர் மற்றும் நாடார் சமுகத்திற்கு எதிராக தேவர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து தேவேந்திர குல காப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். இதனால் பள்ளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் பதிலடி அதிகமாக இருந்தது. இத்தருனத்தில்தான் இம்மானுவேல் கொலைசெய்யப்பட்டார்.
இம்மானுவேலின் போராட்ட வாழ்க்கையை விரிவாகக் கூறும் இப்புத்தகம், தென் மாவட்டங்களின் சமூகச் கூறுகள் பற்றியும், அவருக்கு இடையேயான உறவு நிலைகள் மாறி வந்துள்ளது குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. ஆதித்தமிழர்களான பள்ளர்களும், நாடார்களும், மறவர்களும் நிலங்களிலும், களங்களிலும் ஒன்றுமையாக வாழ்ந்த காலங்களையும், உடமையாளர்கள், ஆதிக்கசக்தியனரால் ஒடுக்கப்பட்ட செய்தியையும் மறக்காமல் பதிவு செய்துள்ளது. முதுகுளத்தூர் கலவரம் புத்தகத்துடன் இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் சமுக உரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்..’ ஆகும்

மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்......

.பள்ளர்,,குடும்பர்,காலாடி,பன்னாடி,மூப்பர்,தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறபிக்க கோரியும்,நீதிபதி ஜனார்த்தனன் அவர்களின் அறிக்கையை வெளியிடக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் . மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்... அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்:22-08-2015.
நேரம்:காலை 11 மணி.
இடம்:இராமநாதபுரம் மாவட்டம்.
ஒரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க அரசியல் அதிகாரம் வென்றெடுக்க தேவேந்திரகுல மக்களே... அழைக்கிறார் டாக்டர் அய்யா அவர்கள் .. அரசியல் பாகுபாடின்றி அலைக் கடல் என திரண்டு...
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாடகம் .....அமித்ஷா...? ..

. தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் கடந்த 15 ஆம் தேதி மாநாடு நடத்தப்படுவதாக இருந்தது. அப்போது அமித்ஷா வரமுடியாததால் தள்ளிவைக்கப்பட்டு, மாநாடு 6ஆம் தேதி (இன்று) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சியும் சுதேசி விழிப்புணர்வு மாநாடு என்றுதான் கூறின ...தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும் , இந்த சுதேசி அமைப்பும் RSS ன் பின்னணியில் இயங்கக்கூடியது ... இந்த அமைப்புகளுக்கு நிதியும் RSS தான் கொடுக்கிறது..
அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடாமல் (ஆரம்பமே தகராறு ) ஆண்டாள் பாசுரம் பாடினார்கள். இந்த மாநாட்டை நடத்திய தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ் பேசும்போது, ''தமிழகத்தில் ஒரு கோடி தேவேந்திரர்கள் வாழ்கிறார்கள். தேவேந்திரனை தெய்வமாக வணங்கும் எங்கள் சமூகம் பசுவை தெய்வமாக வண ங்குபவர்கள் .
எங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட இழிவை நீக்க வந்தவர் அமித்ஷா. எங்கள் சமுகத்தை சேர்ந்தவர் அவர்.(குடும்பர் கதை வேறு ) அவர்தான் மத்திய பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேந்திர சமுதாயம் பசுவை வணங்க கூடியவர்கள். மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் என்றார். அதைக்கேட்ட பின்புதான் எங்கள் சமுதாயத்தின் மதிப்பு உயர்ந்தது. அதனால்தான் எங்கள் சமூக காவலன் அவர் (தேவேந்திர சமுகத்திற்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார் ) தலைமையில் நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, பாரம்பரியமிக்க சாதியை சேர்ந்தவர்கள் என்ற பிரகடனத்தை இங்கு வெளியிடுகிறோம்.

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாடகம் .....அமித்ஷா...? ..


நம் பாரத நாட்டில் சாதிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை உண்டு. அதனால்தான் கலப்பு திருமணம் வேண்டாம் என்கிறோம். அந்தந்த சாதிக்குள் திருமணம் செய்தால்தான் குடும்ப உறவுகள் சிதையாமல் இருக்கும். எங்கோ நடக்கும் காதல் திருமணங்களை பத்திரிகைகள் எழுதி பெரிய பிரச்னை ஆக்குகின்றன. அதெல்லாம் ஒன்றுமில்லை. தமிழகத்தில் சாதிப்பிரச்னையே இல்லை. தினமும் குளிக்காதவன், மாட்டுக்கறி சாப்பிடுகிறவன், சுத்தமில்லாதவன், இவர்கள்தான் தீண்டத்தகாதவன் என்று மனு சொல்கிறார். நாங்கள் அந்த லிஸ்டில் வரமாட்டோம். எங்களை தேவேந்திர குல வேளாளரறேன்று அறிவிக்க மற்ற சாதியினரும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதனால், எங்களுக்கு எந்த சலுகையும் வேண்டாம். எங்கள் குல தெய்வமாக தேவேந்திரனாக அமித்ஷா தெரிகிறார்’’ என்றார்.
குருமூர்த்தி பேசும்போது, ''நானே தேவேந்திரர்களை தாழ்ந்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். தங்கராஜிடம் பேசியபின்புதான் அவர்கள் சாதி பெருமைகள் தெரிந்தது. இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தார்கள். புதிய சிந்தனைகளை வளர்த்தார்கள். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்க பார்த்தர்கள். இன்று இந்தியா உயர்ந்து நிற்கிறதென்றால் அது சாதிகளால்தான். எனவே சாதி இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதியையும் தன்னை உயர்ந்த சாதியாக நினைக்க ஆரம்பித்தால் நாட்டில் சாதி சண்டையே வராது. நான் கூட போன பிறவியில் தேவேந்திரனாக பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாடகம் .....அமித்ஷா...?


அமித்ஷா பேசும்போது, ''உங்கள் சமூகம் எவ்வளவு உயர்ந்தது என்று மத்திய பிரதேசத்தில் ஒரு மாநட்டில் ஒரு மாணவன் சமர்பித்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அதில் தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து சாதிகளும் எங்களை பி.சி. பட்டியலில் சேருங்கள் என்று லாபத்தை எதிர்பார்த்து கேட்கும்போது எங்களுக்கு இட ஒதிக்கீடே வேண்டாமென்று கூரும் ஒரு சமுதாயத்தை இங்குதான் பார்க்கிறேன். உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற வைப்பேன்'' என்றவர்,
மேலும், ''எங்களுக்கு அரசாங்கம் எந்த சலுகைகளையும் அளிக்க வேண்டாம். இட ஒதுக்கீடு வேண்டாம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. பெருமை மிகுந்த சாதியை சேர்ந்தவர்கள். அதனால், எங்களை பபட்டியல் சாதியில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் எங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணையில் அறிவிக்க வேண்டுமென்ற பிரகடனத்தில் பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூரத்தியும் கையெழுத்து இட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. அதனால், அவர் ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை. ஹெச்.ராஜா தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. அவருடைய ஆதரவாளர்கள் அதிகம் வந்தனர். தமிழிசைக்கு மேடையில் இருக்கை போடவில்லை. அதனால், இடையிலே எழுந்து போனார். ஆயிரக்கணக்கான தேவேந்திர சமுதாய பிரதிநிதிகள் வந்திருப்பதாக தங்கராஜ் அறிவித்தார். ஆனால், முன்னுறு பேர்தான் வந்திருந்தார்கள். மற்ற சமூகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர்தான் அதிகம் வந்திருந்தனர்.
தேவேந்திர சமுகத்தை இழுக்க பா.ஜ.க. ஏற்பாடு செய்த இந்த மாநாட்டால் அனைத்து தேவேந்திர மக்களும் பா.ஜ.க. பக்கம் சாய்வார்களா? அல்லது தேவேந்திரர் விழாவில் அமித்ஷா ஆர்வமாக கலந்து கொண்டதால் மற்ற சாதியினர் பா.ஜ.க.வை வேறு மாதிரி பார்ப்பார்களா என்பது போகப்போக தெரியும்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரும் மாநாடு எழுப்பும் கேள்விகள் ..?.

தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் , RSS மாநாடு கடந்த 6ஆம் தேதி நடத்தப்பட்டது ... ஆனால் பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சியும் சுதேசி விழிப்புணர்வு மாநாடு என்றுதான் கூறின ...தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும் , இந்த சுதேசி அமைப்பும் RSS ன் பின்னணியில் இயங்கக்கூடியது ... இந்த அமைப்புகளுக்கு நிதியும் RSS தான் கொடுக்கிறது...அதன்படி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடாமல் (ஆரம்பமே தகராறு ) ஆண்டாள் பாசுரம் பாடினார்கள்..இந்த .மாநாடுக்கு சுமார் 300 பேர் தான் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் அண்ணன் ம , தங்கராசு அவர்களால் திரட்ட முடிந்தது ... மற்றவர்கள் RSS ம் பாஜகவினரும்தான் கலந்து கொண்டனர் ... தமிழகத்தில் அய்யா இம்மனுவேல்சேகரன் புகைபடமும் , சிகப்பு , பச்சை அடையாளமும் இல்லாத மாநாடு இதுவாகத்தான் இருக்கும் .. எல்லாம் காவிமயம் ...மத்திய பிரதேசத்தில் ஒரு மாநட்டில் எவனோ ஒரு மாணவன் சமர்பித்த கட்டுரை மூலம் அதில் தேவேந்திர குல சமுதாயம் பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று அமிட்ஷா தெரிந்துகொண்டாராம் ... அதனால்தான் பசுமாடு புனிதம் , பசு மூத்திரம் புனிதம், மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று கொள்கை பிரச்சாரம் செய்ய இங்கு வந்தாராம் ...தென் தமிழகத்தில் சாதி படுகொலைகள் பற்றி அவருக்கு தெரியாதா ..?...நம் நாட்டில் சாதிகள் இருக்க வேண்டுமாம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை உண்டுடாம் . அதனால்தான் கலப்பு திருமணம் வேண்டாம் என்கிறார்களாம் . எவ்வளவு பெரிய சமுக நீதி கருத்து ..?... சாதியை அதன் படிநிலையை , ஏற்ற , தாழ்வை பாதுகாப்பதுதானே இந்த பார்பன இந்து மதம் ... அவர்கள் வேறு எப்படி பேசுவார்கள் ..?..... அதனால்தான் கவனமாக தேவேந்திரர் அரசு ஆணையை மட்டும் பேசினார்கள்... . இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாள் , அரசுவிழா , மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் பெயர் , தமிழக அரசியலில் தேவேந்திரர் களின் அரசியல் அதிகாரம் இதை பற்றி பேசினார்களா ..?... பேச மாட்டார்கள் ஆதிக்கசக்திகளை பகைத்துகொள்ள விரும்பமாட்டார்கள் . குருமூர்த்தி பேசுகிறார் . இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தார்கள். புதிய சிந்தனைகளை வளர்த்தார்கள். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்க பார்த்தர்கள். இன்று இந்தியா உயர்ந்து நிற்கிறதென்றால் அது சாதிகளால்தான். எனவே சாதி இருக்க வேண்டும்... இது நேரடியாக அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கு விடப்படும் சவால் என்பது தெரியவில்லையா ..?... சாதி அமைப்பு தகர்ந்தால் பார்ப்பானும் , பறையனும் இங்கு இருக்க முடியாதே ..?... இந்து மதம் அழிந்துவிடுமே என்ற கவலைதான் அவர்களுக்கு .. மத்திய உ ளவுதுறை மூலம் தகவல் பெற்றவர்கள் , தமிழகத்தில் தேவேந்திரர் சமுகம் புதிய தமிழகம் , மற்றும் தேவேந்திர அமைப்புகளில் தான் உ ள்ளனர் ... அவர்கள் போர் குணம் மிக்க சக்திகள் , வேறு தலைமையின் கீழ் அணிதிரள மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டார்கள் .. தேவேந்திர சமுகத்தை இழுக்க பா.ஜ.க. ஏற்பாடு செய்த இந்த மாநாட்டால் அனைத்து தேவேந்திர மக்களும் பா.ஜ.க. பக்கம் சாய்வார்களா? .....கடந்த இரண்டு மாதமாக பா.ஜ.கவினர் அவர்களின் கட்சிக்கு SC அணிக்கு ஆட்கள் தேடி அலைந்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது ... அந்த வகையில் இந்த மாநாடு அவர்களுக்கு உ தவலாம்... மற்றபடி தேவேந்திரர் களுக்கு பட்டை நாமந்தான் .... தொடரும் .

காலச்சுவடுகள்.....சென்னையில் 07.03.2015 பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அளித்த பேட்டி:


1995-ஆம் ஆண்டு பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் பெரிதும் வாழும் கொடியங்குளம் கிராமம் தூத்துக்குடி காவல்துறையினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல் நீடித்தது. புதிய தமிழகம் கட்சியின் தொடர் முயற்சியால் 2001-க்குப் பிறகு சமூக நல்லிணக்கம் உருவாக்கப்பட்டது. 2001-லிருந்து 2011 வரையிலும் 10 ஆண்டுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய அளவிலான மோதல்களோ, தொடர் சம்பவங்களோ நடைபெறவில்லை. 2011-ஆம் ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் மரணமெய்தினார்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஆங்காங்கே நடைபெற்ற சிறிய சம்பவங்கள் கடந்த காலங்களை நினைவுபடுத்தக்கூடிய வகையில் அடுக்கடுக்கான கொலை சம்பவங்களாக மாறிவிட்டன. கடந்த ஒர் அண்டில் மட்டுமே தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் பிற பட்டியலின வகுப்பினர் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
15, 16 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் என குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதையே தங்கள் சாதிக்கு எதிரான சவாலாகக் கருதி கைதேர்ந்த கூலிப்படைகளை ஏவி கொலைசெய்யும் போக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிய வடிவம் எடுத்துள்ளது. தென்தமிழகத்தில் பட்டியலினப் பிரிவு மக்கள் மட்டுமின்றி வேறெந்த சமுதாயத்திலும் ஒருபடி மேலே வளரக்கூடியவர்களை கொலை செய்து அழித்தொழித்து அதன் மூலம் அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் ஒரு பீதியை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிடப்படுகிறது.
இதுவரையிலும் உத்திர பிரதேசம், பீகார் போன்ற வடக்கு மாநிலங்களில் மட்டுமே நிலவிவந்த சாதிமறுப்புத் திருமண தம்பதியினரை உயிரோடு கொளுத்தும் அவலங்கள் தமிழகத்தில் அண்மைக்காலமாக மிகமிக அதிகரித்துவிட்டன. இதுபோன்று கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 105 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. கெளரவக் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தருமபுரி இளவரசன் கொலையில் துவங்கி நேற்றைய தினம் சிவகங்கை தமிழ்செல்வி வரையிலும் எண்ணற்ற கொலைகள் அரங்கேறிவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றியோ, கெளரவக் கொலைகள் குறித்தோ கொடுக்கப்படும் எந்த ஆதாரங்களையும் காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய பன்னீர்செல்வம் கண்டுகொள்வதாய் இல்லை. அதைவிட 100 படி மேலே சென்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கெளரவக் கொலைகளும் தமிழகத்தில் நடைபெறவே இல்லையென்று அப்பட்டமான பொய்யை அவர் தெரிவிக்கிறார்.
கண்ணெதிரே நடக்கக்கூடிய கொலைகளைக் கூட அது கொலையே அல்ல என்று காவல்துறை அமைச்சர் வக்காலத்து வாங்குகிற பின்புலத்தில் கொலைகாரக் கும்பல் முழு தைரியத்தோடு தமிழகத்தில் வலம் வருகிறது. அ.இ.அ.தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இதுபோன்ற எளிய மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தானாக அதிகரித்துவிடும் என்பதற்கு இந்தமுறை ஆட்சியும் விதிவிலக்காக விளங்கவில்லை. மாறாக
இவ்வாட்சியில் புதிய வரலாற்றைப் படைக்கக்கூடிய அளவிற்கு கெளரவக் கொலைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுவது மட்டுமல்ல, அந்த மக்கள் சிறிது வளமோடு வாழக்கூடிய பகுதிகளில் அவர்களை சொந்தக்காலில் வளர்ந்துவிடாமல் தடுத்திடும் நோக்கத்தோடு அவர்களுடைய சொத்து சுகங்களை அபகரிக்கும் கொடுமைகளும் அதிகரித்துவிட்டன. கொடியங்குளம் சம்பவத்தில் கூட அது ஒரு சாதி மோதல் என்பது ஒருபக்கம் இருப்பினும் சிறிது வசதியோடு வாழ்கிறார்கள்; அந்த வசதிகளை நிர்மூலமாக்க வேண்டுமென்று தான் அன்றைய காவல்துறையைப் பயன்படுத்தி அந்த கிராம மக்களுடைய சொத்துகளும் சுகங்களும் சூறையாடப்பட்டன. கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருவைகுண்டம் பிச்சனார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நகரப் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த பாஸ்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது எந்தவித கிரிமினல் வழக்குகளும் இல்லை; யாரோடும் முன்விரோதம் ஏதும் இல்லை. ஆனால் அந்தப் பகுதியில் சிறிது நிலபுலன்களோடு வாழ்ந்துவந்த தங்களுடைய சொந்தங்களுக்கு பக்கபலமாக விளங்கியவர். அந்த கிராமத்தில் இன்றுவரையிலும் நடக்கக்கூடிய விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளை சொல்லி மாளாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட 40 வீட்டுமனைகளில் இப்பொழுது 85 குடும்பங்கள் நெருக்கடியிலேயே வாழ்கிறார்கள். பேரூராட்சியின் அங்கமாக இருக்கக்கூடிய அந்தப் பகுதிக்கு எந்தவிதமான சாலைவசதிகளும் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; அங்கன்வாடி இல்லை; சமுதாயநலக்கூடம் இல்லை. பேரூராட்சியும் அவர்களுக்கு நியாயமாக செய்யவேண்டிய வசதிகள் எதையும் செய்யவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது அப்பகுதியின் அமைச்சராக இருக்கக்கூடியவரும் ஏதும் செய்யவில்லை.
அருகாமையில் இருக்கக்கூடிய அங்கன்வாடிகளுக்கு தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் சென்றால் அந்த அங்கன்வாடி ஆசிரியையே சாதியக் கண்ணோட்டதோடு அக்குழந்தைகளை அடித்து விரட்டிடும் கொடுமை; அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கூட தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் எவரும் படிக்க முடியாத அளவிற்கு அன்றாடம் அச்சுறுத்தல் தொல்லைகள்; பெண்கள் அந்தப் பகுதியைத் தாண்டி வேறுபகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு தங்கள் குடியிருப்புகளுக்கு வரக்கூடிய வழியில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இளைஞர்களால் படக்கூடிய அவமானங்களுக்கு எல்லையே இல்லை. அப்பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்கும் குமரகுரு பள்ளி மற்றும் கல்லூரியில் தேவர் ஜெயந்தியன்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் வலுக்கட்டாயப்படுத்தி இனிப்பு கொடுத்து கொண்டாடுவது; அதை கல்வி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் அதற்கு அனுமதியளித்து வருகிறது. பள்ளி செல்ல முடியாது, கல்லூரி செல்ல முடியாது, வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லமுடியாது.
தங்களிடத்தில் இருக்கக்கூடிய அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு எடுத்த நிலங்களிலே விளையும் எந்தப் பயிர்களுக்கும் பாதுகாப்பும் இல்லை. நன்கு விளைந்த நெல் அல்லது உளுந்து அல்லது பயிர்வகைகள் எதுவானாலும் அய்யாமார்கள்(தேவர்கள்) மாடுகள் திண்றது போக மீதம் இருந்தால் தான் இம்மக்கள் அறுவடை செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 10,000 செலவழித்து வளர்ந்த நெற்பயிராயிற்றே… அறுவடை செய்யும் தருவாயில் இருக்கக்கூடிய பயிராயிற்றே… உளுந்தாயிற்றே… அதில் மாடுகளை விட்டு அழியாட்டம் செய்யலாமா? என்று தட்டிக் கேட்டால் அடி உதை. புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு; தங்களது அழியாட்டங்களை தட்டிக்கேட்க தலைநிமிர்ந்தால் கூலிப்படைவைத்து வெட்டிக் கொல்வது, இதுதான் திருவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் நடக்கும் சமூகநீதி. தனக்காக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் இதுபோன்ற அநியாயங்களை எதிர்த்தும் குரல் கொடுத்ததற்காகத்தான் புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர் பாஸ்கர் கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நாட்டுக்குள் நாடு என அரசியல் சாசனத்தை துச்சமென மதிக்காத சாதிசாசனத்தை உருவாக்க தொடர்ந்து ஒரு கும்பல் தென்தமிழகத்தில் முயற்சித்து வருகிறது. இதற்கு பெரும்பாலும் இரையானவர்கள் பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் என்றாலும் பிற சமுதாயத்தினரும் தப்பியதில்லை. 2002-ஆம் ஆண்டு தேவகோட்டையில் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த நல்லமுறையில் வளர்ந்து வந்த ரூசோ என்ற தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளர் படுகொலைக்கு ஆளானார். திருவைகுண்டம் அருகே நடந்துவரும் மணல் கொள்ளையை தடுக்க தன்னலம் கருதாமல் பாடுபட்ட ஆசிரியர் தேவசகாயம் நாடார் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதேபோன்று சுயம்புலிங்க நாடார் என்பவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்டார். வள்ளியூரில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த் டேவிட் ராஜா என்ற கல்லூரி மாணவர் மற்றும் திருநெல்வேலியில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த பொன்னையா என்ற இளைஞர் ஆகியோர் கொலைசெய்யப்பட்டனர்.
தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய எல்லா சம்பவங்களிலும் ஒர் அம்சம் நிரந்தரமாக நிலையோடிருக்கிறது. கொலை செய்வதன் மூலம் கொலைக்குள்ளாகும் சமூகங்களின் மத்தியில் ஓர் அச்சத்தை உருவாக்குவது; அதன்மூலம் தங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எந்தப்பகுதியில் இருந்தும் வராதவாறு பார்த்துக் கொள்வது; இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எல்லாவிதமான சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவது; அச்சம் காரணமாக விலைமதிப்பற்ற தங்கள் வீடுகள், நிலங்கள், வணிக நிறுவனங்கள் உட்பட பல சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு எப்படியாவது அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு போனால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி, அதன்மூலம் அச்சொத்துகளைக் கவர்வது; கேட்ட விலைக்கு நிலத்தைக் கொடுக்கவில்லையெனில் 500, 1000 எண்ணிக்கையிலான மாடுகளை விட்டு விவசாய நிலங்களை அழிப்பது; சிறு மற்றும் குறு விவசாயிகளுடைய நிலங்களை அந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரே நிலவுடைமையாளரின் அனுமதி இல்லாமலேயே உழுவது மற்றும் பணத்தை வசூலிப்பது போன்ற எண்ணற்ற அக்கிரமங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காவல்துறை மற்றும் அரசியல் பின்புலத்தோடு அரங்கேறி வருகின்றன. 
கூலிப்படையினருக்கு அரசு மீதும் காவல்துறை மீதுமிருந்த கொஞ்சநஞ்ச பயமும் கடந்த 6 மாத காலமாக முற்றிலும் போய்விட்டது.
தேசம், தேசியம், தமிழ், திராவிடம் பேசும் எவரும் பூர்வீக தமிழ்க்குடி மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுங்கோண்மைகளை எதிர்த்து குரல் கொடுக்கத் தயாராக இல்லை. தென்தமிழகம் ஆசியக் கொடுங்கோண்மையின் (Asian Despotism) கருவூலமாக மாறிவருகிறது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மண்ணுரிமை மறுக்கப்படுகிறது; மனித உரிமை காலில்போட்டு மிதிக்கப்படுகிறது; வாழ்வுரிமை கேள்விக் குறியாகிறது.

அ.தி.மு.க. ஆட்சியின் போது கொடியங்குளத்தில் தேவேந்திர குல மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றன. அதை ஈடுகட்ட தேவேந்திர குல மக்களை சமாதானபடுத்த அம்மையார் ஜெ எடுத்த முயற்சிகள் ...!!!!

அ.தி.மு.க. ஆட்சியின் போது கொடியங்குளத்தில் தேவேந்திர குல மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றன. அதை ஈடுகட்ட தேவேந்திர குல மக்களை சமாதானபடுத்த அம்மையார் ஜெ எடுத்த முயற்சிகள் ...!!!!
''95-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அந்தக் கொடிய சம்பவம் தவறுதலாக நடை பெற்றுவிட்டது என்பதை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றவுடன், உணர்வாலும் உடைமைகளாலும் பாதிப்புக்கு உள்ளான தேவேந்திர குல வேளாள மக்களின் காயத்துக்கு மருந்து போடக்கூடிய வகையில் பல திட்டங்களை அவர் அறிவித்தார். தென் தமிழகத்தில், பள்ளர்,- குடும்பர்,- காலாடி , பண்ணாடி , தேவேந்திர குலத்தான் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்ட மக்களை, சட்டமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அடையாளப்படுத்திப் பெருமை சேர்த்தார். கொடியங்குளம் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்கள் வசிக்கும் 13 கிராமங்களுக்குப் பயன்படக் கூடிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.67லட்சம் ஒதுக்கினார். எட்டு தென் மாவட்டங்களில் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர் பதவியில் தேவேந்திர குல மக்களை அமரவைத்தார். கட்டபொம்மனின் தளபதியும் சுதந்திரப் போராட்டத்தின் முதல் தற்கொலைப் போராளியுமான வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரால் தனி போக்குவரத்துக் கழகம் தொடங்கினார். ராமநாத புரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்த நிறைகுளத்தானை எம்.பி. ஆக்கினார். அசாதாரணமாக நடந்து விட்ட ஒரு தவறை ஈடுகட்டுவதற்காக, நிறையக் காரியங்களை ஜெயலலிதா செய்துள்ளார்.... எல்லாம் சரி தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை வெளியிட தயக்கம் ஏன் ..?

தேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாதியமைப்பின் வேர்கள் நமது பழங்குடி மரபில் உள்ளன. இந்திய நிலப்பரப்பில் இருந்த பல்லாயிரம் பழங்குடிச் சமூகங்களே அடுத்த கட்டத்தில் சாதிகளாகப் பரிணாமம் கொண்டன. இந்தியப் பழங்குடிச் சமூகங்கள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவே சாதியமைப்பு. நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் நிலமே ஏற்றதாழ்வை தீர்மானிக்கும் அளவுகோல். ஆகவே நில உடைமை சார்ந்து சாதிகள் மேலே கீழே என அமைக்கப்பட்டன. நிலம் இழந்த சாதிகள் கீழே செல்வதையும் நிலம் பெற்ற சாதிகள் மேலே வருவதையும் இந்திய வரலாற்றில் சாதாரணமாகக் காண்கிறோம். சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள பள்ளர்கள் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள். அவர்கள் நிலமிழந்து கீழே சென்றது சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்த விஷயம் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சாதியமைப்பில் உள்ள அதிகார அடுக்கை உறுதியாக நிலைநிறுத்துவதற்கான கருத்தியல்கள் வைதீக இந்து மதத்தில் இருந்து எடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டன. இன்று நாம் பார்க்கும்போது ஏற்றத்தாழ்வை உருவாக்க அக்கருத்தியல்கள் தான் இன்று வரை ஆதிக்கம் செலுத்துகிறது 

தேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொகுப்பு மூலமே அவர்கள் மக்கள்திரளாக ஆகி அதிகாரம் நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்... தேவேந்திர குல வேளாளர் என்ற பொது அடையாளத்தில் தற்போது அணி திரள்கிறார்கள் ..... தங்களின் சமுக உ ரிமைக்காக இட ஒதுக்கீட்டை கூட வேண்டாம் என்ற மனநிலையில் எம் மள்ளரின மக்கள் ..தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டில் பயன் அடையாத தமிழ் சமுகமே இல்லை எனலாம் .... பட்டியலின மக்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு பயன் கிடைப்பது போன்ற மாய தோற்றம் இங்கே உ ருவாக்கப் படுள்ளது ... பார்பன இந்து மதம் போல் இட ஒதுக்கீடு தத்துவமும் புதிய வகை வர்ணாசிரமத்தை இங்கு தோற்றுவிக்கபடுகிறது .. இங்கே எல்லா சாதிகளும் அதிகாரமும் சமூக இடமும் பெறும் வழியாக இருக்கிறது. ஆகவே சாதியை ‘ஒழிப்ப’தெல்லாம் சாத்தியமே அல்ல. கோடானுகோடி மக்களை அவர்களின் அடையாளத்தை விட்டுவிடும்படி கொள்கைப்பிரச்சாரம் செய்வதென்பது நடைமுறைச் சாத்தியமான ஒன்றல்ல. சாதிகள் தங்களைத் திரட்டிக்கொண்டு ஜனநாயக அதிகாரத்தை நோக்கிச் செல்லும் இன்றைய போட்டியை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.. தமிழக அரசியல்வாதிகள் சாதியைப் பற்றிச் சொல்லும்போதே சாதிக்கு எதிராக கர்ஜனைசெய்யும் எவருமே தனிவாழ்க்கையில் சாதியை விட்டு விலகாதவர்கள். சொல்லப்போனால் ஒருவர் சாதி ஒழிக என்று கூவினாலே அவர் சாதியவாதி என்றுதான் பொருள்... சாதி அரசியலை கடைபிடிக்காத அரசியல் கட்சிகளே இங்கு இல்லை ...எனவே தேவேந்திர குல வேளாளர்களின் சமுக அடையாளமும் , அரசியல் அதிகாரமும் பெறுவதை யாரும் தடுத்து விட முடியாது 

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்...

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்..... இன்று . நாங்கள் “தேவேந்திரகுல வேளாளர்” என அழைக்கப்பட வேண்டும் எனப் போராடும் மள்ளர்கள் தேவேந்திரனின் வழிவந்தவர்கள் இவர்கள் பள்ளர்கள் என அரசு ஆவணங்களில் எழுதப்பட்டு தீண்டாமைக்குரியோர் என்பது நேர்மையற்றதும் துரதிஷ்டவசமுமாகும். சங்க காலத்தில் மாண்புமிகு சமூகத்தவர்கள். மருதநிலங்களில் நெல்விளைவித்து மானுடப் பசியாற்றிய மள்ளர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்கள் எனச் சங்க இலக்கியங்கள் சான்றுகள் பகரும். மருதநில தெய்வமான இந்திரனின் வழிவந்த இவர்கள் இந்திரனுக்கு கொவில் கட்டி விழா எடுத்த நிகழ்வுகள் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது .கூர்மையான அறிவும் கருணையுள்ள இதயமும் பெற்றிருந்த இவர்களுக்கு ஊர்த் தலைமைப் பதவி இயல்பாய் வந்தாலும், குடும்ப அமைப்பை உருவாக்கியதாலும் குடும்பன் எனவும், மழை வெள்ளங்களைக் கால்வாய் கண்டு திறம்பட கையாண்டவர்களாதலால்வெள்ளாளர் எனவும் அறியப்பெற்றனர்..ஐய்யாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் நெற்பயிர் வேளாண்மைக்குச் சொந்தக்காரர்கள் என அறியப்பட்ட வரலாறும், மருதநில மண்ணின் குடிகளான மள்ளர்கள் கொண்டாடும் திருவிழாக்களும், வாழ்வியல் ஒழுங்குகளும் இன்றும் கடைபிடிப்பது இவர்களின்தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப்பெயர் வேண்டுகோளுக்கான காரணிகள்.,,, காரணங்கள் அப்படியே இருக்கிறது காரியம் எப்போது தேவேந்திரா ..?

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்..

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்..... மள்ளர்கள்தான் மண்ணின் மைந்தர்களாகவும், ஏர் உழவர்களாகவும், போர் மறவர்களாகவும் இருந்திருந்தனர். இவர்களின் தலைவன் வேந்தன்(இந்திரன்) என்று அழைக்கப்பட்டுப் பின்னர் மருதநிலத் தெய்வமானான். பழந்தமிழ் நாட்டினை 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்டு வந்த தமிழ் இனத்தினரான மள்ளர்களே இன்றைய பள்ளர்கள் என்பதற்க்கான இலக்கியச்சான்றுகள் மிகுதி. வட தமிழகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்கள் இவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவைகளே இவர்கள் தங்களை “தேவேந்திரகுல வேளாளர்” என்று அழைத்துக் கொள்வதும் பிறராலும் அழைக்கப்படவேண்டும் எனவும் வேண்டுவதற்க்கான காரணங்கள் ... 15ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே 84 பெருங்கிளைகளைக் கொண்ட மள்ளர்கள் பள்ளர்களென இழிவுபடுத்தப்பட்டிருந்தனர். வெள்ளையர் ஆட்சின்போது இவர்கள் குடும்பன்,, காலாடி..என அழைக்கப்பட்டனர்... தமிழகத்தின் தலைசிறந்த கோயில்களில் நடத்தப்பெறும் திருவிழாக்களின் போது தேவேந்திரகுல வேளாளர்களின் பங்களிப்பு சங்க காலம் தொட்டே இருந்திருக்கிறது.. இன்று வரை முதல் மரியாதை பெரும் சமூகமாக இருக்கிறது ...

தேவேந்திரர்கள் பட்டியல் வெளியேற்றம் ஏன் ..?..... அதற்கான காரணங்கள்...!!!!!



.......................................................பள்ளர் (அ) மள்ளர் இனத்தினர் எஸ்.சி ( SC ), பி.சி ( BC ), எம்.பி.சி( MBC ), எப்.சி (FC), டி.என்.சி( DNC ) என அனைத்துப் பட்டியலிலும் உள்ளனர். விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியா முழுவதும் இருந்த சாதிகளை சமூக அடிப்படையில் முற்ப்பட்ட சமூகத்தினர் (FC) எனவும் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தவர் (OBC) எனவும் பிரித்தனர். இவர்கள் இல்லாமல் தீண்டாமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தீட்டுப்படுத்தக்கூடியதாக கருதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் என்ற அடிப்படையில் 76 சாதிகளை உள்ளடக்கி பட்டியல் சாதியினர் (SC) என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஒரு சாதியை பட்டியல் வகுப்பில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு 11 வரையறைகளை வகுத்திருந்தது அவற்றில் முக்கியமானவை, அ) தீண்டாமையை அனுபவிப்பவர்கள் ஆ) கோவிலில் நுழைய அனுமதி இல்லாதவர்கள் இ) பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள் ஈ) மாட்டுக்கறி உண்பவர்கள் உ) பசுவை வணங்காதவர்கள் ஊ) தீட்டுப்படுத்தும் தொழிலைச் செய்பவர்கள் என்பவைகளாகும்.
மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,
அ) குடும்பன் - எஸ்.சி பட்டியலிலும் ( SC - 35 )
ஆ) மூப்பன் -பி.சி பட்டியலிலும் (BC - 65 )
இ) காலடி - டி.என்.சி பட்டியலிலும் ( BC - 35 )
ஈ) காலடி -- பி.சி பட்டியலிலும் (DNC - 28 )
உ) மண்ணாடி - எம்.பி.சி பட்டியலிலும் ( MBC - 16 ) உள்ளன.
தீண்டாமைக்கு அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுவதாகக் கருதப்படும் தொழில்களைப் பள்ளர்கள் செய்வதில்லை . இந்த நாள் வரையிலும் வேளாண்மையே பள்ளர்களின் தொழிலாக உள்ளது.. பள்ளர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை . ஏனேனில் தங்களின் குலத் தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத் தெய்வமாக மதிக்கின்றனர் பள்ளர்கள் .
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் , பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன் கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் , நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையிலும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல விழாக்களும் நடைபெறுகின்றன , இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே !
1993 - ல் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அன்றைக்கு மட்டும்மல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.
பட்டியல் வகுப்பில் இருப்பதற்கான எந்த அடிப்படை காரணங்களும் தேவேந்திரர்களுக்கு பொருந்தாது ... அப்போது இந்த பட்டியலில் சேர்த்தபோது அதனை எதிர்பதற்கு தேவேந்திரர் சமுக தலைமைகள் இல்லை ...
தமிழ் நாடு மட்டுமில்லாது இந்தியா முழுவதுமே அனைத்து பட்டியல்களிலும் (SC, BC, MBC, DNC, FC) உள்ள பள்ளர்களை தலித் ,தாழ்த்தபட்டவன் ,எஸ்.சி(SC),ஆதி திராவிடர் என அழைப்பது பள்ளர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டமிட்ட சதியே ஆகும். பள்ளர்களின் அடையாளத்தை மட்டுமில்லாது "பள்ளர்களே சேர சோழ பாண்டியர் " எனும் வரலாற்று உண்மைகளையும் பெருமைகளையும் மறைத்து " இவர்கள் யார் ?" என்பதை உணர்ந்துவிடாமல் , பள்ளர்களை உளவியல் ரீதியகவும் முடக்கும் திட்டமிடபட்ட சதியே ஆகும்....