ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

போராட்டத்தில் ஈடுபடாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி.M.D.M.L.A., ..

.....................................................மாணவ, மாணவிகள் மதுவிலக்கு தொடர்பான போராட்டங்களில் ஈடுபடாமல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வரவேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சியின் மகளிர் அணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் தலைமை வகித்து பேசுகையில், இந்த ஆர்ப்பாட்டம் மகளிர் அணி சார்பில் நடைபெறகிறது. தமிழகத்தில் இந்த மதுக்கடையால் இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் ஆகியோரும் குடிப்பழகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடிப்பழக்கத்தால் கல்லீரல் மண்ணீரல் ஆகியவை பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் தெருவிற்கே வந்து விடும் சூழ்நிலை இருக்கிறது.
இக்கட்சி தொடங்கியதிலிருந்தே மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பொதுமக்கள் இயக்கமாக மாறியதை தொடர்ந்து தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மது விலக்கை அமுல்படுத்தக்கோரி போராடும் அனைவருக்கும் எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். அதேபோல், மதுவிலக்கு பிரச்னை குறித்து மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபடாமல், பொதுமக்களுக்கு மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ், மத்திய தலைவர் வெள்ளைச்சாமி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் அணியினர், கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக