ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்......

..............இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிலுள்ள செல்லூர் என்ற கிராமத்தில் தேவேந்திரர் (பள்ளர்) சாதியைச் சேர்ந்த சேது வாத்தியாருக்கும், ஞானசௌந்தரிக்கும் 09..10.1924 அன்று இம்மானுவேல் பிறந்தார். சேது வாத்தியார் கிறித்துவத்தைத் தழுவி வேதநாயகம் ஆனார். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியதால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். பள்ளிக் கல்வி முடித்த இம்மானுவேல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸில் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதம் சிறை சென்றுள்ளார். பின்னர் ஆயுதப் பலத்துடன் வெள்ளையரை விரட்டும் எண்ணத்துடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேரமுயன்றார். அதற்குள் நேதாஜி இறந்துவிட்டதால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், அமிர்தம் கிரேஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் மீண்டும் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவப் பணியில் இருந்து விடுப்பில் திரும்பியபோது முதல் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்திருந்தது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் முத்துராமலிங்கத் தேவருக்கு வாக்களிக்காத பிற சாதியினர் மீது மறவர்கள் வன்முறையை ஏவி வந்தனர். இதில் பெரிதும் தேவேந்திரர்கள் அதிகம் பாதிக்கப்படனர். இம்மானுவேல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பள்ளர்களின் அச்ச உணர்வைப் போக்கினார். நிலைமை மேலும் மோசமடையவே, இராணுவத்துக்குத் திரும்பாமல் முழு நேர சமூகப்போராளியானார். இதனால் அச்சத்தில் இருந்த மக்கள் இம்மானுவேல் தலைமையில் அணிதிரன்டனர். பள்ளர் சமூகத்தினரிடையே சமத்துவ உரிமை ஏற்பட உழைத்தார். தேவேந்திரர் குலச் சங்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் ஆகியவற்றின் பொருப்புகளை ஏற்றார். குறிப்பாக இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடினார். கக்கன் போன்றவர்களின் முயற்சியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், இம்மானுவேலின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் வழங்கவில்லை. என்றாலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சி அரசியலையும் பள்ளர்களுக்கு உதவும் நோக்கிலேயே பயன்படுத்தினார் என்று தெரிகிறது. தேவேந்திரர் மற்றும் நாடார் சமுகத்திற்கு எதிராக தேவர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து தேவேந்திர குல காப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். இதனால் பள்ளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் பதிலடி அதிகமாக இருந்தது. இத்தருனத்தில்தான் இம்மானுவேல் கொலைசெய்யப்பட்டார்.
இம்மானுவேலின் போராட்ட வாழ்க்கையை விரிவாகக் கூறும் இப்புத்தகம், தென் மாவட்டங்களின் சமூகச் கூறுகள் பற்றியும், அவருக்கு இடையேயான உறவு நிலைகள் மாறி வந்துள்ளது குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. ஆதித்தமிழர்களான பள்ளர்களும், நாடார்களும், மறவர்களும் நிலங்களிலும், களங்களிலும் ஒன்றுமையாக வாழ்ந்த காலங்களையும், உடமையாளர்கள், ஆதிக்கசக்தியனரால் ஒடுக்கப்பட்ட செய்தியையும் மறக்காமல் பதிவு செய்துள்ளது. முதுகுளத்தூர் கலவரம் புத்தகத்துடன் இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் சமுக உரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்..’ ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக