ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொக்கிசங்கள்"..

....1930 கிழக்கு ராமநாதபுரத்தில் மறவர் சாதியார் கூடி பறையர் சக்கிலியருக்கு விதித்த சமூகக் கட்டுப்பாடுகளை தேவேந்திரருக்கும் புகுத்த முனைந்த போதுதான் பெருங்கலகம் துவங்கியது.
நாயக்கர் ஆட்சியையும் அவருக்குத் துணையாகவும் விசுவாசியாகவும் இருந்த கள்ளர்களை எதிர்த்து 1529 முதலே இவர்கள் போராடி வருகிறார்கள், கடந்த 470 ஆண்டுகளாக நடந்து வரும் இம்மோதலில், இரு சாதியிலும் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம்.
1881, 1891 ஆகிய இரு குடிக் கணக்கெடுப்பிலும் தேவேந்திர குல வேளாளர்களை வேளாண்குடிச் சமூகம் (Agricultural Class) என்று பொது சமூகக் கணக்கில்தான் சேர்த்துள்ளார்கள். 1901ம் ஆண்டு குடிக் கணக்கெடுப்பிலிருந்து தான் 'பள்ளன்’ என்ற ஒரு தனிச் சாதிக்கணக்கு ஆவணங்களில் உள்ளது.
நாயக்கராட்சிக்குப் பின் வரி வசூல் உரிமையிலும், கிராம ஆதிக்கத்திலும் இருந்த சமீன்தார்களை எதிர்த்து இவர்கள் நடத்திய போர் ஒரு தனி வரலாறாகும். தமிழ் நாட்டு கிராமீயப் பாடல்களில் இவ்வரலாறு பொதிந்து கிடக்கிறது. செல்லாயிபுரம் தமிழ்ச்செல்வன் எழுதிய ஒரு கட்டுரையில் தேவேந்திரருக்கும் போடி, தேவாரம் ஆகிய இரு சமீன்களுக்கும் தொடர் பகை இருந்ததாகவும் இதனடிப்படையில் எழுந்த மோதல்களில் இச்சமூகத்தார் இரு சமீன்களையும் தாக்கிப் பலரைக் கொன்றதாகவும், அரண்மனைக்குச் சொந்தமான பல கட்டங்களை இடித்துத் தகர்த்ததாகவும் இம்மோதலில் ஏராளமான தேவேந்திரரும் சமீன் படை வீரர்களும் மடிந்ததாக உள்ள செய்தியைக் கொடுத்துள்ளார். இதே போல் நெல்லை மாவட்டத்திலும் நடந்துள்ளது. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் முழுவதை அலசி ஆராய்ந்தால் இதுபோல் மேலும் பல செய்திகளைக் கண்டுபிடிக்க முடியும்,
பள்ளன் என்ற பெயர் சதி செய்து திணிக்கப்பட்ட பிறகும், தேவேந்திரகுலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, ஆகிய குல உயர்வுப் பெயர்களில் தங்கள் சாதிப் பெயரை லட்சக் கணக்கானோர் பதிவு செய்துள்ளார்கள். 1971 குடிக் கணக்கெடுப்பில் 13 லட்சம் பேர் பள்ளன் எனற பெயரிலும், மற்ற குலப் பட்டப் பெயர்களில் 8 லட்சம் மக்களும் பதிவு செய்துள்ளார்கள். இப்பெயர்கள் எல்லாம் இப்பொழுதும் எஸ்.சி. அட்டவணையில் உள்ளன.
1938 ல் காந்தி அரிசன சேவா சங்கம் ஆரம்பித்தார், இச்சங்கம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட மதுரை சேவாலயம் மாணவர் விடுதியைத் திறக்க வந்த ராசாசியை எதிர்த்துப் போரிட்டது தேக்கம்பட்டி அஞ்சா நெஞ்சன் பாலசுந்தரராசு மட்டுமே. அட்டவணைச் சாதிக் குழந்தைகளை அடிமை வழிக்குப் பக்குவப்படுத்தும் இம்முயற்சியைத் தமிழ்நாட்டில் எதிர்த்த ஒரே தலைவர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசாகும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக