ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

காலச்சுவடுகள் .....19:05:2014 ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பட்டியலில் இருந்து விடுபடுவது பற்றியும் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் க.கிருஷ்ணடாமி M .D .M .L .A ., அவர்களின் சிறப்பு பேட்டி ...

.தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்காக போராடி வருகின்றனர். அது போலவே காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாள்ப படுத்த வேண்டும் என்று இந்த சமூக மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.அது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை இந்த அரசாங்கம் ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களுக்கு மனசு வரவில்லை.
இதனால் வெறுப்புற்ற தேவேந்திர குல சமூக மக்கள், திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர் என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது என்பதை நினைத்து , வெறுப்புற்ற மக்கள் , அப்படியானால் இந்த பட்டியலில் இருந்தே விடுபட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
பட்டியலே வேண்டாம் என்றும் சொல்ல
ஆரம்பித்து விட்டனர். இதில் நியாயம் இருகின்றது..இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் தேவேந்திர குல மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப்பட்ட பட்டியலில் (SC ) இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக படித்தவர், படிக்காதவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக