ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாடகம் .....அமித்ஷா...?


அமித்ஷா பேசும்போது, ''உங்கள் சமூகம் எவ்வளவு உயர்ந்தது என்று மத்திய பிரதேசத்தில் ஒரு மாநட்டில் ஒரு மாணவன் சமர்பித்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அதில் தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து சாதிகளும் எங்களை பி.சி. பட்டியலில் சேருங்கள் என்று லாபத்தை எதிர்பார்த்து கேட்கும்போது எங்களுக்கு இட ஒதிக்கீடே வேண்டாமென்று கூரும் ஒரு சமுதாயத்தை இங்குதான் பார்க்கிறேன். உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற வைப்பேன்'' என்றவர்,
மேலும், ''எங்களுக்கு அரசாங்கம் எந்த சலுகைகளையும் அளிக்க வேண்டாம். இட ஒதுக்கீடு வேண்டாம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. பெருமை மிகுந்த சாதியை சேர்ந்தவர்கள். அதனால், எங்களை பபட்டியல் சாதியில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் எங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணையில் அறிவிக்க வேண்டுமென்ற பிரகடனத்தில் பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூரத்தியும் கையெழுத்து இட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. அதனால், அவர் ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை. ஹெச்.ராஜா தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. அவருடைய ஆதரவாளர்கள் அதிகம் வந்தனர். தமிழிசைக்கு மேடையில் இருக்கை போடவில்லை. அதனால், இடையிலே எழுந்து போனார். ஆயிரக்கணக்கான தேவேந்திர சமுதாய பிரதிநிதிகள் வந்திருப்பதாக தங்கராஜ் அறிவித்தார். ஆனால், முன்னுறு பேர்தான் வந்திருந்தார்கள். மற்ற சமூகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர்தான் அதிகம் வந்திருந்தனர்.
தேவேந்திர சமுகத்தை இழுக்க பா.ஜ.க. ஏற்பாடு செய்த இந்த மாநாட்டால் அனைத்து தேவேந்திர மக்களும் பா.ஜ.க. பக்கம் சாய்வார்களா? அல்லது தேவேந்திரர் விழாவில் அமித்ஷா ஆர்வமாக கலந்து கொண்டதால் மற்ற சாதியினர் பா.ஜ.க.வை வேறு மாதிரி பார்ப்பார்களா என்பது போகப்போக தெரியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக