ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்.....{1}... முதுகுளத்தூர் கலவரம் ....{2}... சமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

....1957 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் குறித்து உடனடியாக 1958 லேயே ஒரு கள ஆய்வு நூல் வெளிவந்துள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்தப் புத்தகம் கடந்த 49 ஆண்டுகளாக ஒரு மறு பதிப்புகூட பெறவில்லை. அ. ஜெகநாதன் முயற்சியால் யாழ்மை பதிப்பகத்துக்காக மறுபதிப்பு செய்யப்பட்டுத் தற்போது வெளிவந்துள்ளது. அதேபோல மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்’ வரலாற்றுப் பதிவும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த கூடுதல் வாசிப்புக்கு உதவுகிறது. தேவேந்திரர் விடுதலைக்கான போராட்டங்கள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்படும் இந்த காலகட்டத்தில் இவ்விரு புத்தகங்களும் முக்கியத்துவம் பெருகின்றன. முதுகுளத்தூர் கலவரம் பள்ளர்களுக்கு எதிராக மறவர்கள் நடத்திய கலவரம். 1957 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேவர் கை நீட்டிய வேட்பாளருக்கு வாக்களிக்காத பள்ளர்கள், நாடார்களுக்கு எதிராக வன்முறை ஏவப்படுகிறது. குறிப்பாக பள்ளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்லவேளையாக இம்முறை பாதிக்கப்பட்ட பள்ளர்களுக்காக வாதாட சமூக உரிமைப் போராளி இம்மானுவேல்தேவேந்திரர் இருந்தார்... இதனால் பள்ளர்கள் பலமாக இருந்த பகுதிகளில் மோதல்கள் பலமாக இருந்தது. இதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். இம்மானுவேல்தேவேந்திரர் இருந்தார். இன்னும் காங்கிரஸ் எம். எல். ஏக்களும், அதிகாரிகளும் இருந்தனர். பிரச்சனைக்குரிய இரு சமூகத்தவரும் சமாதானமாகப் போகவேண்டும் என்றுதான் ஆட்சியர் கூறினார். யார் மீது தவறு என்பதைக்கூட சுட்டிக்காட்டவில்லை. ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மனநிலை, குறிப்பாக மறவர் சமூகத்தவரின் மனநிலை எப்படி இருந்தது என்றால் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இம்மானுவேல்தேவேந்திரர் , முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமாக நாற்காலியில் அமர்ந்து பேசியதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதுமட்டுமல்ல தேவருக்கும், இம்மானுவேல் அவர்களுக்கும் கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.” கூட்டறிக்கை விடுவதென்று யோசனை கூறப்பட்டது. தேவர் அதற்கு சம்மதிக்கவில்லை. தேவேந்திரர்கள் சார்பில் இம்மானுவேலும், காங்கிரஸ் சார்பில் நாடார்களும் அறிக்கையில் கையொப்பமிடுவதை ஆட்சேபித்தார். தேவர் ... அப்போது முத்துராமலிங்கத் தேவருக்கும் இம்மானுவேலுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. ஒரே வாசகமுள்ள தனித்தனி அறிக்கைகளில் தனித்தனியாய் கையெழுத்திடலாம் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார். அதற்கும் தேவர் ஆட்சேபித்தார். ஆனால், ‘கையெழுத்திகிறீரா, இல்லையா?’ என்று கலெக்டர் கடுமையாகக் கேட்டதன்பேரில் தேவர் கயெழுத்திட்டார். கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளே, மறுநாள் 11ம் தேதி (செப்டம்பர், 1957) இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடியில் பஸ் ஸ்டான்டுக்குப் பக்கத்தில் இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டார்.” (முதுகுளத்தூர் கலவரம், பக்: 57) ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக