ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொக்கிசங்கள்"....

.....1939 ல், மதுரை மீனாட்சி கோயிலில் நடந்த அரிசன ஆலயப் பிரவேசத்தில் பறையர், நரடார் ஆகிய இரு சாதியார் மட்டுமே கலந்தார்கள். தேவேந்திரர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு ஆதரவு தருமாறு பாலசுந்தரராசைக் கூப்பிட வந்த வைத்தியநாத அய்யருக்கும் பாலசுந்தரராசுக்கும் மதுரை மங்கம்மாள் சத்திரம் அறை எண். 7 - ல் பெரிய வாக்குவாதம் நடந்துள்ளது, (அரிசன ஆலயப் பிரவேசத்தில் கலந்து கொண்டவர்கள், 1, தும்பைப்பட்டி கக்கன், 2. உசிலம்பட்டி முத்து 3. மதிச்சியம் சின்னையா, 4, ஆலம்பட்டி முருகானந்தம், 5.விராட்டிபத்து ஆவலிங்கம், 6. விருதுநகர் சண்முக நாடார். இதில் 5. பேர் பறையர், ஒருவர் நாடார்.)
1947 -ல், ஏ,பி. ராமசாமி செட்டியார் காலத்தில் கூர்மையா கமிட்டி என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் நோக்கம் அரிசன மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு கோடியை எப்படிச் செலவு செய்வது என ஆய்வு செய்து அறிக்கை தருவதாகும். இக்குழு பள்ளர்களுக்கு இப் பணத்திலிருந்து எதுவும் செலவு செய்ய வேண்டியதில்லை. அவர்கள் நல்லநிலையில் உள்ளார்கள் என்ற கருத்தை வெளியிட்டது, அதாவது, இவர்கள் தீண்டாமை அனுபவிக்கும் மக்கள் அல்ல என்ற கருத்தை வெளியிட்டது, .
கூர்மையா கமிட்டியில் மொத்தம் 27 பேர் இருந்தார்கள். இவர்களில் தேவேந்திரர் ஒருவரும் இல்லை. அக்காலக் கட்டத்தில் தேவேந்திர குல வேளாளரில் அஞ்சாநெஞ்சன் பாலசுந்தரராசு ஆயக்குடி எசு.சி பாலகிருட்ணன், திட்டை சுப்ரமணியன், தொண்டு வீராச்சாமி, ஆர். எசு. ஆறுமுகம், பெருமாள் பீட்டர் வீரம்பல் வேதமாணிக்கம், சொக்கலிங்கம், சிவக்கொழுந்து, டி. ட்டி. ராசன், ஜி.ஏ. ஞானசுப்பிரமணியன், மேலக்கால் வீரபத்திரன் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்தார்கள். இவர்களில், தேக்கம்பட்டித் தலைவரைத் தவிர, மற்றவர் காங்கிரசுக்காரர்கள் ஆனால், யாருமே கூர்மையா கமிட்டியில் சேர்க்கப்படவில்லை.
இதற்குக் காரணம் இவர்கள் எல்லோரும் சரிகை வல்லவெட்டு அணிவார்கள். இது சமீன்தார், தோரணையாகும்.
எனவே யாரையும் சேர்க்கவில்லை. பொது வாழ்க்கைத் தலைவர்களை விட்டு, விட்டு அரசு அதிகாரிகளை எடுத்துக் கொண்டாலும் கூர்மையா கமிட்டி அமைக்கப்பட்ட போது தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த 48 கெசடட் அதிகாரிகளாக இருந்தார்கள் என்று தெரிகிறது. இவர்களில் யாரையாவது கமிட்டியில் சேர்த்திருக்கலாம், ஆனால் சேர்க்கவில்லை.
ஆக, இந்தியாவில் பல மாநிலங்களின் எஸ்.சி, எஸ்.டி, பட்டியலை ஆய்வு செய்தால் நாட்டின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள், ஆரியக் கலாச்சாரத்தோடு கலக்காதவர், ஆரிய இனவழி அதர்மக் கொள்கைகளை எதிர்த்துப் போரிட்டவர், இப்படிப்பட்ட சாதி - சமூகங்களையெல்லாம் இப்பட்டியலில் சேர்த்திருப்பதைக் காணலாம்.
அதே சமயம் ஆரிய பார்ப்பன இனவழியை நிலைநாட்ட அவர்களுக்குத் துணையாகவும், அடியாட்களாகவும் இருந்த சாதிகள் எல்லாம், அவர்கள் எத்தனை துறைகளில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இப்பட்டியலில் இல்லாமல் இருப்பதையும் காணலாம்.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக