வியாழன், 22 செப்டம்பர், 2011
பரமக்குடியில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 3 நாள் உண்ணாவிரதம்: டாக்டர் கிருஷ்ணசாமி
பரமக்குடியில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 3 நாள் உண்ணாவிரதம்: டாக்டர் கிருஷ்ணசாமி
ராமநாதபுரம், செப்.22: பரமக்குடியில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூகத்தில் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி பிரச்னையைப் பெரிதாக்கி சிலர் அரசியல் லாபம் பார்க்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதை சரி செய்ய வேண்டும். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைதி நிலவ, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கவுள்ளேன். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக