ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

தோழர். செங்கொடிக்கு வீரவணக்கம்

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த ஞாயிறன்று தீக்குளித்து உயிர் துறந்த காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி உடல் இன்று( 31.8.2011) மாலை அடக்கம் செய்யப்பட்டது.காஞ்சிபுரம் அருகே மங்கல்பாடியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது. வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சத்யராஜ், கொளத்தூர் மணி, சேரன்,ஜான்பாண்டியன், ஜி.கே, மணி, சீமான், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நளினி தாயார் பத்மாவதியம்மா, உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக