ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவரம்?

. தேவர்களின் சாதி வெறி ஊர் உலகம் அறிந்தது. இணையத்திலும்கூட அவர்கள் கிட்டத்தட்ட ஒரு நாஜிப்படையைப் போல் இயங்கிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்துவிடலாம். ‘ஒரு தலித் நாய் செத்தது’ என்று சியர்ஸ் சொல்லி கொண்டாடும் ஃபேஸ்புக் உரையாடல்களை இணையத்தில் காணலாம். முத்துராமலிங்கத் தேவரை ஒரு தேசியவாதியாகவும், இறை பக்தனாகவும், உத்தமனாகவும், கடவுளாகவும் உயர்த்திப் பிடிப்பவர்கள் இவர்கள். தெய்வத் திருமகள் என்று திரைப்படத்துக்குப் பெயர் வைத்தபோது கலாட்டா செய்த செயல்வீரர்கள். தெய்வத் திருமகன் என்றால் பசும்பொன் தேவர் மட்டுமே. அவரை எதிர்த்து ஒரு குரல் ஒலித்தாலும் ஒரு சொல் உச்சரிக்கப்பட்டாலும் வன்மத்துடன் பாய்ந்து வருபவர்கள் இவர்கள். சாதிய ஆதிக்கம் என்பதையும் தாண்டி, சர்வ வல்லமை படைத்த ஒரு பாசிச சக்தியாக தேவர்கள் உருமாறிக்கொண்டிருப்பதையே பரமக்குடி படுகொலைகள் நிரூபிக்கின்றன. முதுகளத்தூர் கலவரம் தொடங்கி பரமக்குடி படுகொலை வரை ஒரு தொடர்ச்சி இருப்பதைக் கவனித்தாலே இதனைப் புரிந்துகொள்ளமுடியும். அரசியல்வாதிகளின் பலத்தையும் ஆயுத பலத்தையும் நம்பி வளர்ந்தவர்கள் இவர்கள். பரமக்குடியில் இந்த இரண்டும் ஒன்றிணைந்து வினை புரிந்திருக்கின்றன. முத்துராமலிங்கத் தேவர் ஆதிக்க தேவர் சாதியின் அடையாளம் என்றால், இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் அடையாளம். நடைபெறுவது ஆதிக்கச் சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையிலான போராட்டம் என்னும் நிலையில், முத்துராமலிங்கத் தேவர் என்னும் அடையாளத்துக்கு எதிராக இம்மானுவேல் சேகரன் என்னும் அடையாளத்தை மக்கள் உயர்த்திப் பிடிக்கும்போது தேவர்களை ஆத்திரமடைகிறார்கள். இம்மானுவேல் என்னும் போர்க்குணம் மிக்க அடையாளத்தை தேவர்கள் வெறுக்கிறார்கள். அந்த அடையாளத்தை அழிக்கவும் அகற்றவும் விரும்புகிறார்கள். அம்பேத்கர் தமிழகம் முழுவதும் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதையும், முத்துராமலிங்கத் தேவர் கம்பீரமாக மாலை, மரியாதையுடன் காட்சியளிப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்கே ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதும் அடிமைத்தளத்தில் இருந்து விடுபட போராடுபவர்கள் யார் என்பதும் தெரியும். வன்முறையாளர்கள் யார் என்பதும், வன்முறைக்குப் பலியாகிக்கொண்டிருப்பவர்கள் யார் என்பதும் தெரியும். ‘பரமக்குடி படுகொலையை நிகழ்த்தியவர்கள் தேவர்கள் , காவல்துறையினர். ஏனென்றால், அரசு எப்போதுமே ஆதிக்கச் சாதியினரின் கருவியாகவே செயல்பட்டு வருகிறது. அதன் இயல்பு அப்படி. அந்த வகையில், பார்ப்பனர்களின் கருத்தாக்கம் எப்படி மேலானதாக மாறுகிறதோ அப்படியே தேவர்களின் கருத்தாக்கமும் மேலானதாக மாறிவிடுகிறது. ஆதிக்கச் சாதியினர் தங்கள் காரியத்தை அரசின் துணைகொண்டு சாதித்துக்கொண்டுவிடுகிறார்கள். எனவேதான், தலித்துகள் ‘வன்முறையாளர்களாக’ ஊடகங்களில் வலம் வருகிறார்கள். அவர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் ‘கலவரம்’ நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தலித்துகள் மேற்கொள்ளும் ‘தாக்குல்களைத்’ தடுத்து நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் காவல்துறையினருக்கு ஏற்படுகிறது. பரமக்குடி படுகொலைகளைப் பொறுத்தவரை காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தேவர்களின் பாசிசத்தையும் சேர்த்தே கண்டிக்கவேண்டியிருக்கிறது. இரண்டையும் ஒருசேர எதிர்த்தே போர்க்கொடி உயர்த்தவேண்டியிருக்கிறது. தேவர்கள் மட்டுமல்ல, ஆதிக்கச் சாதியினர் அனைவருக்கும் இது பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக