ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ஜெ ...ஜான் பாண்டியன் .

பரமக்குடியில் கலவரம்.. துப்பாக்கிச் சூடு.. ஏழு பேர் உயிரிழப்பு என செப்டம்பர் 11-ல் நடந்த துயர நிகழ்வின் பாதிப்பு வெவ்வேறு விதத்தில் தொடர்ச்சியாக தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரசுக்கும் போலீசுக்கும் எதிரான தங்களின் கோபத்தை சாலை மறியல், பஸ் மீது கல்வீச்சு, ரயிலைக் கவிழ்க்க முயற்சி என தேவேந்திர மக்கள் வெளிப்படுத்த.. சில ரோ ‘டிராக்’ மாறி தேவர் சிலை அவமதிப்பு போன்ற காரியங்களில் இறங்கி, ‘சென்சிடிவ்’ ஆன தென் மாவட்டங்களில் சாதிக் கலவரத்துக்கு வழிவகுத்துக் கொண் டிருக்கின்றார்கள். ஜான் பாண்டியன் கைது என்ற தகவல் தானே கலவரத்துக்கு பிள்ளையார் சுழி போட் டது? ஏன் இந்த வன் முறை?’ என்ற நெருட லுடன் தமிழக மக் கள் முன் னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டிய னை பேட்டி கண்டோம். நக்கீரன் : தென் மாவட்டங்களில் பரவலாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் நடக்கின்றனவே? ஜான் பாண்டியன் : ஆமாம்.. நடக்கிறது. நக்கீரன் : பரமக்குடியில் நடந்த கலவரத்துக்கு காரணமே ஜான் பாண்டியன் தான்.. அவரது ஆதரவாளர்கள்தான் சாலை மறியல் செய்து, போலீஸாரை தாக்கி வன்முறைக்கு வித்திட்டார்கள். அதுதான் இப்போது பரவிக்கொண்டிருக்கிறது என காவல்துறை குற்றம் சாட்டுகிறதே? ஜான் பாண்டியன் : என்னைச் சுற்றி எஸ்கார்ட்.. போலீஸ்ன்னு இருக்கும்போது நான் எப்படி கலவரத்துக்கு காரணமாக இருக்க முடியும்? எஸ்.எம்.எஸ். அனுப்பியா கலவரம் பண்ண முடியும்..? இல்லை போன்ல பேசி இதைச் செய்ய முடியுமா? அப்படி நான் தவறு பண்ணியிருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறேன். முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். கொலை செய்யப்பட்ட மாணவர் பழனிக் குமாரின் வீட்டுக்குப் போகக்கூடாது என்று சொன்னது போலீஸ். நானும் அதற்கு சம்மதித்து தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அவரது நினைவுநாளில் மரி யாதை செய்ய பரமக்குடி செல்வதுதான் எனது நோக்கமே தவிர வேறு எதுவுமில்லை’ என்று போலீஸ் அதிகாரி களிடம் தீர்மான மாகச் சொல்லிவிட் டேன். அப்படி யிருந்தும் தேவை யே இல்லாமல் என்னை கைது செய்தது போலீஸ். இந்தக் கலவரத்துக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு ஆணித்தரமான பதில் இருக்கிறது. சொல்லட்டுமா? ஒட்டுமொத்த தேவேந்திர மக்களின் நெடு நாளைய கோரிக்கையே இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்பதுதான். இதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த நாளில் ஒன்று கூடுகிறோம். தேவேந்திரர்களின் இந்த ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும், அப்படி ஒரு அங்கீகாரம் தேவேந்திரர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்று திட்டமிட்டு காவல் துறை அதிகாரிகள் செய்த சதியே அங்கே துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. காவல் துறையில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும். போலீஸ் டிபார்ட் மெண்டில் தேவர் படை, எஸ்.சி. படை என்று தனித்தனி ‘விங்’ இருக்கிறது. எந்த சாதியினரை அடிக்க எந்த சாதி போலீஸை பயன்படுத்தலாம் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி தேவேந்திரர்களுக்கு எதிரான ஒரு விங்’ஆடிய கோரத்தாண்டவம்தான் பரமக்குடியில் அரங்கேறியது. மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டார்கள். மூன்று பேரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் செத்து, பலரும் தரையில் புரண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை யில் போலீஸ் வாகனத்துக்கு தேவேந்திரர்கள் தீ வைத்தார்களாம்? நல்ல கதையாக இருக்கிறதே. இது எப்படி சாத்தியமாகும்..? துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த போலீஸ் செய்த காரியம் அது. நடந்தது எல்லாமே போலீஸ் எடுத்த வீடியோவில் பதிவாகியிருக்கும் அல்லவா? அதைக் கோர்ட்டுக்கு கொண்டு வரட்டும். அப்போது தெரியும் போலீஸின் சதி வேலை. இந்த அக்கிரமங்கள் பத்திரிகைக்காரர்கள் கண்ணில் பட்டு விடக்கூடாது என்று அவர்களை பாதுகாப்பதாகச் சொல்லி ஒரு இடத்தில் பூட்டி வைத்து விட்டது போலீஸ். இத்தனையையும் செய்துவிட்டு, 1000 பேர் மீது வழக்கு, கைது என்று தேவேந்திர மக்களை மிரட்டும் காரியத்தில் இறங்கியிருக்கிறது அரசாங்கம். நான் கேட்கிறேன்.. தேவேந்திரர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகள் மீது செக்ஷன் 302 ஏன் பாயவில்லை..? ஒரு சஸ்பென்ஷன் கூட இல்லையே..? ஒரு நபர் கமிஷனெல்லாம் கண் துடைப்பு வேலை.. ஏற்றுக் கொள்ள முடியாது.. சி.பி.ஐ. விசாரணை வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். நக்கீரன் : அப்படியென்றால் இப்போது அங்கங்கே நடக்கின்ற கல் வீச்சு, பஸ் உடைப்பு போன்ற அசம்பாவிதங்களுக்கெல்லாம் யார் காரணம்? ஜான் பாண்டியன் : சந்தேகமே வேண்டாம்.. முதலமைச்சர் ஜெயலலிதாதான், சட்ட மன்றத்தில் அவர் பேசிய பேச்சுதான். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி அவர் விளக்கம் கொடுத்தது தான். ஒரு சாராருக்காக மட்டும்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்பதுபோல இருக்கிறது சட்டமன்றத்தில் பதிவான அவரது பேச்சு. தேவரைப் பற்றி சுவரில் இழிவாக யாரும் எழுத வில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது முதலமைச்சரின் இந்த அணுகுமுறை. போலீஸ் கொடுத்த ஒரு பொய்யான அறிக்கையை ஒரு பொறுப்புள்ள முதலமைச்சர் அப்படியே சட்டமன்றத்தில் வாசிக்கலாமா? இது எவ்வளவு பெரிய தவறு. ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு தான் தேவேந்திர மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்படி எழுதியிருந்தாலும் அதற்காக கொலை செய்வதை நியாயப்படுத்துகிறாரா முதல்வர்? ஜெயலலிதா உட்பட எல்லா அரசியல்வாதி களும்தான் ஒருவரை ஒருவர் இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இதற்கெல்லாம் கொலை செய்ய ஆரம்பித்தால் ஒரு அரசியல் வாதிகூட உயிரோடு இருக்க முடியாதே..? நக்கீரன் : அது சரி. தி.மு.க. ஆட்சியில் சாதிக்கலவரம் என்றால் தூண்டிவிட்டது அ.தி.மு.க. என்ற குற்றச்சாட்டு எழும். ஜெயலலிதாவும், கருணாநிதி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று காரசாரமாக அறிக்கைவிடுவார். இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு அங்கே டென்ஷனைக் கிளப்பியது உங்கள் வேலைதான் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.. உங்களை யாரும் தூண்டி விட்டார்களா? ஜான் பாண்டியன் : அங்கே கலவரத்தை தூண்டியது சத்தியமாக போலீஸ்தான். உயிர் களைக் கொன்று அரசியல் பண்ணுகிறவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா. என்ன? ஒருவேளை அப்படி இருந்தால் அவர்களை மன்னிக்கவே முடியாது. தி.மு.க. என்னைத் தூண்டிவிட்டது என்று சொல்பவர்களை பரிதாபமாகத்தான் நான் பார்க்கிறேன். கலவரம் செய்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் கேவலமான வர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக