ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இன்றும் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கு சாபாநாயகர் ஜெயக்குமார் தலைமையில் தொடங்கியது.கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் எழுந்து பரமகுடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேச அனுமதி கோரினார் ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார். பேச அனுமதி தரும்படி நீண்ட நேரம் வலியுறுத்திக் கொண்டிருந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தன் கோரிக்கையை திட்டவட்டமாக சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.சட்ட பேரவை வாசலில் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர் அப்போது அவர் கூரியதாவது:- முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் மட்டுமே சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த முடியும் என்பதற்காகவே அவரது அணியில் கூட்டணி கட்சியாக இடம் பெற்றோம். நேற்று சட்டமன்ரத்தில் பேசும்பொது கூட இந்த கருத்தை பதிவு செய்தேன். தமிழ்நாட்டில் இனக் கலவரம் இனி ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கம் கொண்டவன் நான். எனவே தான் பரமக்குடியில் நடைபெற்றது இனக் கலவரம் அல்ல என்று பேசினேன். அங்கு நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால அந்த மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தற்காலிக பணி நீககம் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. சட்டமன்றத்தில் இந்த கருத்தைப் பேசுவதற்காக எழுந்தேன் அதே சமயம் முதலமைச்சர் நேற்று பேசும்போது பிரச்சினையின் காரணத்தை தெரிவித்து அவையில் பதிவு செய்திருக்கிறார்கள். அது உகந்த கருத்து அல்ல. அந்தக் கருத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்பினேன். ஆனால் என்னை பேச விடவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்தேன் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக