ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

என்னை போலீசார் கைது செய்தது தவறான முடிவாகும் :

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தியாகி இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியின்போது போலீஸ் அதிகாரிகள் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 8 பேர் இறந்துள்ளனர். ஏழை-எளிய மக்களை அடித்து ஒடுக்கிவிடலாம் என்று ஒரு சில போலீஸ் அதிகாரிகள் நினைக்கிறார்கள். 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்த தமிழகம் ஒட்டு மொத்தமாக திரண்டது. ஆனால் பரமக்குடியில் ஆதிக்க வெறி பிடித்த போலீஸ் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் இறந்தனர். போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில போலீஸ் அதிகாரிகள் வன்முறை நாடகத்தை ஏற்படுத்தி விட்டனர். அஞ்சலி செலுத்த வந்த என்னை போலீசார் கைது செய்தது தவறான முடிவாகும். தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியான 8 பேர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், தலா ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக