பரமக்குடி கலவர சம்பவத்துக்கு முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவே பொறுப்பு என்று, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
பரமக்குடி சம்பவத்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெற்றிக்கு காரணமான கூட்டணியினரை கழற்றிவிட்டது தவறான முன் உதாரணம். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக