வெள்ளி, 23 செப்டம்பர், 2011
ஜான்பாண்டியன்- டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு
விழுப்புரம்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் திடீரென சந்தித்தார்.
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸை தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, பா.ம.க. பொதுச் செயலர் வடிவேல் ராவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பரமக்குடியில் தலித் மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்த டாக்டர் ராமதாஸுக்கு, ஜான்பாண்டியன் நன்றி கூறியதாக தெரிகின்றது. மேலும், பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து பா.ம.க. தரப்பில் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் நடத்தது என கூறப்படுகின்றது.
இருப்பினும் வருங்காலத்தில் ஜான் பாண்டியனுடன் தென் மாவட்டங்களில் இணைந்து செயல்பட பாமக திட்டமிட்டுள்ளதாக இந்த சந்திப்பு உணர்த்துகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக