ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நிர்வாகி கொலை: 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் லட்சுமணன் என்ற பாஸ்கரன் கடந்த 22-ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவருக்கும் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், கணேசன், பாதாளம் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக் கொலை நடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாஸ்கரனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணி அளவில் கேடிகே நகருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாஸ்கரன் தந்தை மாரிமுத்துவிடம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் இளங்கோ இழப்பீட்டு தொகையாக ரூ.5,62,500-க்கான காசோலையை முதல்கட்டமாக வழங்கினார். மீதமுள்ள ரூ.1,87,500 பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஸ்கரன் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பகுள தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கணேசன் (23), கண்ணன் மகன் விக்னேஷ் (22), சேதுராமன் மகன் பாதாளம் (23), பெரும்பத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவா (25), தோழப்பன்பண்னையை சேர்ந்த சண்முகம் மகன் இசக்கி ஆனந்த் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: இக்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி கரண்சின்கா உத்தரவின்பேரில், எஸ்.பி. அன்பு, டி.எஸ்.பி. பொன்னுரை ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சிவகுமார், மனோகர், கலையரசன் ஆகியோர் வியாழக்கிழமை ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விசாரணையைத் தொடங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக