ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் நிர்வாகி கொலையில் மணல் கொள்ளையர் தொடர்பு : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு....

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
நெல்லை: ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் செயலாளர் கொலையில் தாமிரபரணி மணல் கொள்ளையருக்கு தொடர்பு உள்ளது என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். ஸ்ரீவைகுண்டத்தில் கொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்ததால் அது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்து பாஸ்கரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: 

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 102 கவுரவ, சாதி கொலைகள் நடந்ததை நான் சுட்டிக்காட்டியதற்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது என முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பதிலளித்தார். அதை சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு ஒரு பிரிவினர் தென்மாவட்டங்களில் மற்ற பிரிவு மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர்.ஸ்ரீவைகுண்டம் பாஸ்கரன் போலீஸ் நிலையத்திலிருந்து 50 அடி தூரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலையில் தாமிரபரணியில் மணல் கொள்ளையடித்த முக்கிய பிரமுகர் தொடர்பு உள்ளது. வள்ளியூர், தச்சநல்லூரிலும் பிற சமுதாய மக்களை ஒரு பிரிவினர் கொலை செய்துள்ளனர். விரைவில் சென்னையில் அனைத்து சமுதாய தலைவர்களை கூட்டி கலந்தாலோசித்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக