ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மதமாற்றம் செய்வற்கு காரணம் அரசுதான் என்பதை உணரவேண்டும்:கிருஷ்ணசாமி ..

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன் கொடுமை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி, தென்தமிழகத்தில் மிக அதிக அளவில் வன்கொடுமை நடந்து இருப்பதாக கூறி உள்ளார்.

உதாரணமாக கடந்த ஒரு மாதத்திற்குள் மதுரையில் மட்டும் 5–க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி குராயூர் கிராமத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சமூக விரோதிகள் கற்களை வீசி உள்ளனர்.

இதில் வெள்ளைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்து 16 நாள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.  எனவே,  மாவட்ட கலெக்டர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமை களமாக தென்மாவட்டங்கள் மாறி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும். இந்த சம்பவம் நடைபெறும் இடங்களில் துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும்.

இது தொடர்பாக மனு கொடுக்க ஆளுநரிடம் நேரம் ஒதுக்கிதருமாறு கேட்டேன். ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. இன்னும் 2 நாட்களில் நேரம் ஒதுக்கா விட்டால் ஆளுநர் ரோசையா மீது ஜனாதிபதியிடம் புகார் கூறுவேன். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மதமாற்றம் செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதற்கு காரணம் அரசுதான் என்பதை உணரவேண்டும்’’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக