ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையுண்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதாலும், அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதாலும் பதற்றம் ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பிச்சினார்தோப்பைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (எ) பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சி நகரச் செயலரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர்கள் பிரான்சிஸ், ராஜாசுந்தர், பத்மநாபன், தங்ககிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக விக்னேஷ், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மறியல், பேருந்து உடைப்பு: இதற்கிடையே, பாஸ்கரன் கொலையைக் கண்டித்து, ஸ்ரீவைகுண்டம்- வல்லநாடு பிரதான சாலையில் அவரது உறவினர்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் துரை மற்றும் போலீஸார் பேச்சு நடத்தினர்.
இதற்கிடையில், பாளை. அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாஸ்கரனின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்வதற்காக, பிச்சினார்தோப்பில் இருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி. துரை, ஏ.டி.எஸ்.பி. முரளிரம்பா, வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.
அப்போது, கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மறியல் போராட்டம் மாலை வரையில் தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தை ஆயத்துரை அருகே மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.
போலீஸ் குவிப்பு: இந்த சம்பவத்தில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ஸ்ரீவைகுண்டத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அந்த இரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக