ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கலைஞருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு! ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை என பேட்டி!

திமுக தலைவர் கலைஞரை, அவரது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். திமுகவுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும். தேர்தல் ஆணையமும், அரசு இயந்திரமும் இணைந்து ஸ்ரீரங்கத்தில் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பிரச்சனையில், நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில்தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தில் தமிழக அரசு நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல் இழந்துவிட்டது என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக