தமிழகத்தில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கட்ட மைப்பை தாமதிக்காமல் விரைந்து முடிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தி யுள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
புதுடெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளன. இரு தேசியக் கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. குறிப்பாக, பாஜகவின் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
தமிழகத்தில் போக்குவரத்து கட்டமைப்பின் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, போத் தனூர் - பொள்ளாச்சி வரையிலான அகல ரயில்பாதைத் திட்டத்தை பல ஆண்டுகளாக முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல் முதல் உடுமலை, சத்தியமங்கலம், மைசூர் வரையிலான 4 வழிப் பாதை அமைக்கும் பணியும் அறிவிப்போடு நிற்கிறது. இதனால் உற்பத்தி பொருட் களை விரைந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, போத்தனூர் - பொள்ளாச்சி ரயில்பாதை பணியை முடிக்காமல் இழுத் தடித்து வருவது இப்பகுதி மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள் ளாக்கியுள்ளது. இந்த அகல ரயில்பாதைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 6-ம் தேதி கோவையில் எனது தலை மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். மேலும் இதர 5 மண்டலங்க ளிலும் போக்குவரத்து கட்ட மைப்பை மேம்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக