ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

பாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கிருஷ்ணசாமி கோரிக்கை...

பாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கிருஷ்ணசாமி கோரிக்கை

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே இனாம்வெள்ளகால் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வன், முருகன் என்ற 2 மாணவர்கள், பாவூர்சத்திரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த நிலையில், இனாம்வெள்ளகால் கிராமத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேற்று வந்து, கொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கொலை செய்யப்பட்ட 2 மாணவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:– 
2 மாணவர்கள் கொல்லப்பட்டு, சுமார் 25 நாட்கள் ஆகியும், இதுவரை யாரும் கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. குறும்பலாப்பேரியை சேர்ந்த இறந்துபோன அழகர் என்ற சுடலைதான், 2 மாணவர்கள் கொலைக்கு காரணம் என்று போலீசார் கூறுகின்றனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
போலீசாரின் நடவடிக்கை பாரபட்சமாக உள்ளது. கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மாற்ற முயற்சி செய்வோம்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக