ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

ஸ்ரீவைகுண்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு.....,கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தூத்துக்குடி ;புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலைவழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 போலீஸ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் 26, புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர். கடந்த 22ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுவரையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இந்த கொலைக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம்-வல்லநாடு சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நேற்று அந்த பகுதி மக்கள் பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை டி.ஐ.ஜி.,சுமித்சரண், தூத்துக்குடி எஸ்.பி.,துரை ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
144 தடையுத்தரவு:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று ஸ்ரீவைகுண்டத்திற்கு வருவதாக இருந்தது. அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமானநிலையத்தில் அவரை சந்தித்த தூத்துக்குடி எஸ்.பி.,துரை <உள்ளிட்டவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் 27ம் தேதி வரையிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசியல் தலைவர்கள் யாரும் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பதையும், பாஸ்கரன் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதையும் தெரிவித்தனர். எனவே இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக