ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்..


ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் புதியதமிழகம் கட்சி சார்பில் தென் மாவட்டங்களில் தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்க்கேட்டைக் கண்டித்தும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் படுகொலைகள் அதிகரித்து வருவதை கண்டித்து இதற்கு காரணமான கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்ரீவைகுண்டத்தில் படுகொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பட்டவராயன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மனோகரன், மாநில செய்தி தொடர்பாளர் கப்பிகுளம் பாபு, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சுடலைமணி, நகர செயலாளர் முருகானந்தம், கதிரவன், கருணாகரபாண்டியன், முனியசாமி உள்ளிட்ட புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கைது

இதனால் தூத்துக்குடி, கோவில்பட்டி, புளியம்பட்டி, குறுக்குச்சாலை, புதியம்புத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக