ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

காலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் தொழில்துறை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

காலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் தொழில்துறை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி....புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தென்மாவட்டங்களில் பல்வேறு காலக்கட்டங்களிலும் சாதி மோதல்கள் இருந்து வருவதால் தொழில் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன். இது ஒரு காரணமாக இருந்தாலும் சமுதாய ஏற்றத்தாழ்வும் ஒரு காரணமாக இருக்கிறது.
பள்ளர், குடும்பர் , பண்ணாடி , காலாடி , மூப்பன் , தேவேந்திர குலத்தான் என பல பிரிவுகளாக இருப்பதை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே இனமாக அறிவிக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறேன். இமானுவேல்சேகரனின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தென் தமிழகத்தில் நீண்ட காலமாக தொழில்துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொழில் வளர்ச்சிக்குரிய கட்டமைப்பு வசதிகள் தேவை.
எனவே சென்னை முதல் கன்னியாகுமரி வரை சரக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
தூத்துக்குடி துறைமுகம், மதுரை விமான நிலையம் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும். தென்தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும் இங்கு தொடங்கப்படும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் விளைவிக்காத வகையில் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக