ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

வன்மையாக கண்டிக்கிறேன் ...!!!

வன்மையாக கண்டிக்கிறேன் ...!!!..தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களை பற்றி மாத இதழில் அவதூறு கட்டுரை...!!!. நவரசம் என்கின்ற நான்காம் தர வார இதழில் .தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களைப்பற்றி ஆதாரமற்ற , அவதூறான கட்டுரை வெளிவந்துள்ளது ... அதில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை ... தெய்வ திருமகன் "இம்மானுவேல் தேவேந்திரர் " அவர்களின் வீரவணக்க நாள் , ஆண்டுக்காண்டு பலலட்சம் மக்கள் கூடுவதை பொறுக்க முடியாமல் , பரமக்குடி படுகொலைகளை நிகழ்த்தினார்கள் . அப்படுகொலைகளுக்கு முக்கிய காரணம் "தெய்வ திருமகன் இம்மானுவேல் தேவேந்திரர் " என்று துண்டறிக்கைகளில் வெளியிட்டதும் ஒரு காரணம் ... இந்த ஆண்டு தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் { வைகோ , EVKS இளங்கோவன் } கலந்து கொண்டது அவர்களுக்கு பிடிக்கவில்லை . அதனால் அவதூறுகளை பரப்புகிறார்கள் ... தேவேந்திர குல மக்கள் அமைதியாக வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணியினை பாருங்கள் ... நமக்கு வன்முறை தேவையில்லை , அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது நமக்கு தெரியும் .... அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிப்போம் ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக