புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
M.D.M.L.A., அவர்களின் ஆணைக்கிணங்க செல்லாயிபுரத்திலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நலக்கூடத்தில் 23.10.2015 அன்று நடைபெற்ற எழுமலை பகுதியிலுள்ள அனைத்து கிராமங்களைச் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஊர் நாட்டாண்மைகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநில இளைஞரணிச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் பவுன்ராஜ், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் இளம்பிறை சேதுராமன், உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர் கர்ணன், ஒன்றியச் செயலாளர்கள் ஈஸ்வரன், முத்தையா மற்றும் புதிய தமிழகம் பொறுப்பாளர்கள் சிவகாசி முத்துகிருஷ்ணன், எழுமலை பொன்னுச்சாமி, மள்ளப்புரம் போலீஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் அனைத்து கிராம தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நாட்டாண்மைகளும் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
எடுக்கப்பட்ட முடிவுகள்:
1. இந்த கலவரத்துக்கு முக்கிய காரணமானவர்களான பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர்களான பா.ஜ.க.வின் மாநில துணைச் செயலாளார் பொன்.கருணாநிதி (பாரதியார் மெட்ரிக் பள்ளி தாளாளர்) மற்றும் காங்கிரஸ் கட்சியின் எழுமலை 5-வது வார்டு கவுன்சிலர் கணேசன், மறவர் சமூத்தைச் சார்ந்தவர்களான முன்னாள் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரும் முன்னாள் எழுமலை பேரூராட்சித் தலைவருமான முத்தையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரமேஷ்பாபு, மணியக்காரர் சமூகத்தைச் சார்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பெட்டிக்கடை வாசிமலை மற்றும் ரேடியோ செட் முத்தையா, நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்த டீக்கடை பாலன் மற்றும் வாத்தியார் முனியாண்டி ஆகியோரை கைது செய்து அவர்களை மதுரை மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
2. கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் எந்தவித பாரபட்சமின்றி, தயவு தாட்சண்யமின்றி காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
3. இந்த கலவரத்துக்கு பயன்படுத்திய பெட்ரோல் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்த மற்றும் கலவரத்துக்கான சதித்திட்டம் தீட்டப்பட்ட இடமான பா.ஜ.க.வின் மாநில துணைச் செயலாளர் பொன்.கருணாநிதிக்குச் சொந்தமான பாரதியார் மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை இரத்து செய்து, பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும்.
4. எழுமலை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டுக்கு பல கோடி வருமானம் வரும் முத்தாலம்மன் கோவிலை தமிழக அரசு அரசுடைமையாக்கி, கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
5. தொடர்ந்து கலவரம் நடந்து வரும் எழுமலை மற்றும் உத்தப்புரம் பகுதிகளை உயர் பாதுகாப்பு பகுதிகளாக அறிவித்து அங்கு ஆண்டு முழுவதும் மத்திய அரசின் துணை இராணுவப்படை நிறுத்தப்பட வேண்டும்.
6. எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.இராமநாதபுரம், உத்தப்புரம் புறக்காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் எழுமலை பகுதிகளை சொந்த ஊராகக் கொண்ட காவலர்களை உடனடியாக வெளிமாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.
7. கலவரச் சூழலை நன்கு அறிந்திருந்தும் அதனை சரியாக உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சேர்க்காமல் கலவரத்துக்கு ஒருவகைக் காரணமான, எழுமலை பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் நுண்ணறிவு பிரிவு காவலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
8. கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கும் கலவரக் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், 15 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி, தீக்கிரையாக்கப்பட்ட அம்மன் கோவிலை புணரமைப்பு செய்ய வேண்டும்.
9. பாதிக்கப்பட்ட ஆத்தங்கரைப்பட்டி தேவேந்திரகுல வேளாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.
10. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எழுமலை பகுதி வாழ் அனைத்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து எழுமலை புல்லுக்கட்டு மைதானத்தில் வருகின்ற 26.10.2015 அன்று மாலை 4 மணியளவில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக