ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..!!!... உ ண்மை வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சி ...!!!

தமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..!!!... உ ண்மை வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சி ...!!!
..
.முத்துராமலிங்கதேவர் அவர்கள் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்தினார் . தனது நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் , முஸ்லிம் தாயிடம் பால் குடித்தார் , சுகந்திரப்போராட் ட தியாகி , அவரின் பிறந்த நாளும் , இறந்த நாளும் அக் .30, தோல்வியை சந்திக்காத அரசியல் தலைவர் என்று கீறல் விழுந்த ரெக்காடு போல் புலம்புகின்றனர் .. உ ண்மை என்ன ...?
முத்துராமலிங்கதேவர் -தன் சொந்தக்காரியான மேலராமநதி கருப்பாயி அம்மாளை ஏமாற்றி சொத்தை அபகரித்தார்.
கந்து வட்டி கட்டைப் பஞ்சாயத்தில் தன்கு பங்கு கிடைக்காததால் செங்குளம் அய்யரப்ப (நாயக்க)ரிடம் மோதினார்; அவரைத் தண்டிக்கவும் செய்தார்.முதலுக்கு மோசமாக பஞ்சாயத்து செய்தார் .
1928 இல் இருந்து அரசுக்கு வரி செலுத்தாததால், தான் அபகரித்த நிலத்தை ஏலம் விட்டதற்காக கமுதி உதவி தாசில்தார் சிதம்பர (முதலியார்) காலை வெட்டினார்.
இஸ்லாத்துக்கு மதம் மாறிய தேவர்களைப் பயன்படுத்தி, அபிராமம் இஸ்லாமியர்களிடத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, கண்மாயை வெட்டி, தண்ணீரை வெளியேற்றி, பயிர்களை நாசமாக்கினார்.
1937 இல் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் ராஜாவுக்கு தேர்தல் வேலை செய்ததற்காக கமுதி உதவி தாசில்தார் நாகராஜய்யரை தாக்கினார்.
முஸ்லிம் வீடுகளை தேவர்கள் தாக்கிய வழக்கில் தீர்ப்பு நகல் தனக்கு தரப்படாததால், முதுகுளத்தூர் சப் மாஜிஸ்திரேட் பிரம்மநாயகம் (பிள்ளை)யை படுகொலை செய்தார்.
இதுபோக, தன் சொந்த மக்களை உள்ளடக்கிய 32 1/2 கிராமத்தைச் சேர்ந்த முதலாளிகளின் பணத்தையும், விளைச்சலையும் ஏய்த்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சினார்...
உ. முத்துராமலிங்கத்தால் 1925 இல் தொடங்கி முப்பது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற படுகொலைகள் குறித்தோ, வன்கொடுமைகள் குறித்தோ பாதிக்கப்பட்ட முதலியார், பிள்ளைமார், நாயக்கர், நாடார் ஏன் முஸ்லிம்கள் உட்பட அவரை எதிர்த்து ஒருவரும் கேள்வி கேட்டதில்லை. இறுதியாக, 1955 இல் தான் எதிர்கொண்ட மாவீரன் இமானுவேல் சேகரன்தான், உ. முத்துராமலிங்கத்துக்கு சிம்ம சொப்பனமாகிறார். மறவர் - கள்ளர்களின் சண்டியர்த்தனத்தை எதிர்த்து இமானுவேல் சேகரனின் தலைமையில் தேவேந்திரர், நாடார் , பறையர் , அருந்ததியர் ,முஸ்லிம்கள் , அணிதிரண்ட பிறகு இமானுவேல் சேகரனுடன் மோதுவது என்பது, தென்னக ராணுவத்துடன் மோதுவதாகவே சாதி இந்துக்களுக்குப்பட்டது.
கடந்த நூறாண்டு கால வரலாற்றில் தென் தமிழகத்தில் தீண்டப்படாத ஓர் இனம் தன்னுடைய விடுதலைக்காகத் தொடங்கிய கலகப் போரின் விளைவு தான் இந்த முதுகுளத்தூர் கலவரம். ‘பத்ரகாளிக்கு பலி கொடுப்பதற்காக காடமங்குளத்தில் ஒன்பது அரிஜனங்களை தேவர்கள் தூக்கிப் போனார்கள்’ என்கிற நிகழ்வும், அதன் மீதான வழக்கு விசாரணையும் அப்போதைய சட்டமன்றத்தில் முக்கியப் பிரச்சனையாக சலசலப்பை உருவாக்கியது. இந்தப் பிரச்சனையை இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் வரைக்கும் கொண்டு சென்றார். பிறகு பண்ணந்தலையில் தேவேந்திரர்கள் போட்ட கூட்டத்தின் விளைவால் உ. முத்துராமலிங்கத்தை பஞ்சாயத்து வரை இழுத்து வந்து, பொது மக்கள் முன்னிலையில் மாபெரும் குற்றவாளியாக நிற்க வைத்து கையெழுத்திட வைத்த நிகழ்வுதான் - இமானுவேல் சேகரனின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. திட்டமிட்டபடி மறுநாள் அவர் கொலை செய்யப்படுகிறார்..
மதுரை கோவில் நுழைவு போராட்டம் என்பதே ஒரு பித்தலாட்டம் , காங்கிரஸ் கட்சியின் மலிவான அரசியல் , இதில் முத்துராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டதாக வரலாற்று பதிவுகள் இல்லை . அப்போது தேவர் தேடப்படும் குற்றவாளியாக தலைமறைவாக இருந்தார் .
நில உ ச்ச வரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்தாதால் தனது விசுவாசியான சோலை குடும்பன் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .
முத்துராமலிங்கம் அவர்கள் இறந்தது அக் ..29, பசும்பொன்னில் அடக்கம் செய்யப்பட்டது அக் .30.
சுகந்திரப் போராட்டம் என்பதும் ஒரு முறைதான் , மற்றபடி பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை சென்றார் .
மதுரை காமாட்சி தொழிலாளர் சங்கத்தை சாதி சங்கமாக மாற்றிய பெருமை அவருக்கு உ ண்டு .
1957 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி , பார்வர்டு பிளாக் சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி , முதுகளத்தூர் தொகுதியில் தோல்வி , இம்மானுவேல் சேகரன் ஆதரித்த இராசந்திரன் சேர்வை வெற்றி , பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காததால் அகமுடையர்கள் தாக்குதல் , அவருக்கு நோய் வந்தபோது இறைவன் கொடுத்த உ டம்பில் கத்தி படலாமா என்று சிகிச்சைக்கு மறுத்தவர் ,.கர்ம வீரர் காமராஜர் அவர்களை அரைகீரை விற்றவன் , சாணான் என்று சாதியை சொல்லி கீழ்த்தனமாக சாயல்குடி பொதுக்கூட்டத்தில் பேசியவர் , அண்ணா அவர்களை தே ... மகன் என்று மதுரை தமிழ்சங்கத்தில் பேசியவர் , RSS கோல்வால்கருக்கு பணமுடிப்பு கொடுத்தவர் .. மறவர்கள் வாழும் பகுதிகளில் சாலை அமைத்தால் காவல் துறை வாகனங்கள் வரும் , கைது செய்யும் , என்று சாலை வசதிகளை மறுத்தவர் , நேதாஜியிடம் கடலை உ றைய வைக்கும் காந்தம் , இராணுவ டாங்கிகளை பெற்றவர் என்று அவரின் புகழை சொல்லிகொண்டே போகலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக