............................இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நெல்லை, திண்டுக்கல், வால்பாறை, கோத்தகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு, தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில், இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டியலின சமுதாயத்தினரை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற வர வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலிப்பதைத் தடுக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
vanakkam valthukkal sir
பதிலளிநீக்குdr.anbushiva
coimbatore
09843874545
09842495241