ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும்..

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும் .....புதிய தமிழகம் கட்சி தலைவர். டாக்டர் .க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A அவர்கள் அறிக்கை: ......விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமுதாய மக்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளாக கூறப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் தற்போதும் "ன்' விகுதி வைத்து ஒருமையில் அழைக்கப்படுகின்றனர். பட்டியலின பிரிவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதை அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின துறைக்கு சமூக நீதித்துறை அல்லது பட்டியலினத்துறை என பெயரிடுவது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடக்கவுள்ளது.முதற்கட்டமாக 20 முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். 20ம் தேதி திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர், 21ம் தேதி மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கடலூர், 22ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, நாகப்பட்டணம், விழுப்புரம், திருவாரூர், 23ம் தேதி ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், 24ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக