ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஆணைக்கிணங்க

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஆணைக்கிணங்க ...மதுரை மாவட்டம் எழுமலையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆறுதல் ..நேரில் ஆய்வு ....!!!. , ........ மாநில இளைஞரணிச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் அவர்கள் நேற்று இரவு எழுமலை செல்லும் வழியில் காவல் துறையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார். தொடர்ந்து டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க இன்று காலை 9 மணியளவில் மாநில இளைஞரணிச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் இரும்பொறை சேதுராமன், உசிலம்பட்டி தொகுதிப் பொருப்பாளர் கர்ணன், ஒன்றியச் செயலாளர்கள் ஈஸ்வரன், முத்தையா ஆகிய நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் நேரடியாக சென்று சந்தித்து, ஆறுதல் கூறி நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கேட்டறிந்ததன் அடிப்படையில் நம்முடைய கோரிக்கைகள்:
1. இந்த கலவரத்துக்கு முக்கிய காரணமானவர்களான பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர்களான பா.ஜ.க.வின் மாநில துணைச் செயலாளார் பொன்.கருணாநிதி (பாரதியார் மெட்ரிக் பள்ளி தாளாளர்) மற்றும் காங்கிரஸ் கட்சியின் எழுமலை 5-வது வார்டு கவுன்சிலர் கணேசன், மறவர் சமூத்தைச் சார்ந்தவர்களான முன்னாள் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரும் முன்னாள் எழுமலை பேரூராட்சித் தலைவருமான முத்தையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரமேஷ்பாபு, மணியக்காரர் சமூகத்தைச் சார்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பெட்டிக்கடை வாசிமலை மற்றும் ரேடியோ செட் முத்தையா, நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்த டீக்கடை பாலன் மற்றும் வாத்தியார் முனியாண்டி ஆகியோரை கைது செய்து அவர்களை மதுரை மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
2. கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் எந்தவித பாரபட்சமின்றி, தயவு தாட்சண்யமின்றி காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
3. இந்த கலவரத்துக்கு பயன்படுத்திய பெட்ரோல் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்த மற்றும் கலவரத்துக்கான சதித்திட்டம் தீட்டப்பட்ட இடமான பா.ஜ.க.வின் மாநில துணைச் செயலாளர் பொன்.கருணாநிதிக்குச் சொந்தமான பாரதியார் மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை இரத்து செய்து, பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும்.
4. எழுமலை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டுக்கு பல கோடி வருமானம் வரும் முத்தாலம்மன் கோவிலை தமிழக அரசு அரசுடைமையாக்கி, கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
5. தொடர்ந்து கலவரம் நடந்து வரும் எழுமலை மற்றும் உத்தப்புரம் பகுதிகளை உயர் பாதுகாப்பு பகுதிகளாக அறிவித்து அங்கு ஆண்டு முழுவதும் மத்திய அரசின் துணை இராணுவப்படை நிறுத்தப்பட வேண்டும்.
6. எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.இராமநாதபுரம், உத்தப்புரம் புறக்காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் எழுமலை பகுதிகளை சொந்த ஊராகக் கொண்ட காவலர்களை உடனடியாக வெளிமாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.
7. கலவரச் சூழலை நன்கு அறிந்திருந்தும் அதனை சரியாக உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சேர்க்காமல் கலவரத்துக்கு ஒருவகைக் காரணமான, எழுமலை பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் நுண்ணறிவு பிரிவு காவலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
8. கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கும் கலவரக் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், 15 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி, தீக்கிரையாக்கப்பட்ட அம்மன் கோவிலை புணரமைப்பு செய்ய வேண்டும்.
9. பாதிக்கப்பட்ட ஆத்தங்கரைப்பட்டி தேவேந்திரகுல வேளாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.
10. மேலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க எழுமலை பகுதியிலுள்ள அனைத்து கிராமங்களைச் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஊர் நாட்டாண்மைகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செல்லாயிபுரத்திலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நலக்கூடத்தில் நாளைக் காலை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
நன்றி-தமிழ்வேந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக