ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

கொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர் கிருஷ்ணசாமி

கொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர் கிருஷ்ணசாமி
விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில், கொலை குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜை சாட்சியத்திற்காக அழைக்கும் சி.பி.சி.ஐ.டி.-ன் போக்கு, சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
சென்னையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் வழக்கறிஞர் மாளவியா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில், மர்மமான முறையில் உயிரிழந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கு விவகாரத்தில், காவல்துறை உயரதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுள்ள நிலையில், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு, மனு தாக்கல் செய்யப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேலும், கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜை, சாட்சியம் அளிக்க அழைப்பாணை விடுத்திருக்கும் சி.பி.சி.ஐ.டி.-ன் போக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளதென்று தெரிவித்தார்.தலித் பெண் என்பதால் தான், தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம் என்று பொய் தகவலை பரப்புகிறது காவல்துறை என வழக்கறிஞர் மாளவியா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக