ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

வழிபடவும் வழி இல்லையா?

வழிபடவும் வழி இல்லையா?
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா உத்தபுரம், எழுமலை ஆத்தங்கரைபட்டி, கிராமங்களைச் சார்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புதிய தமிழகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிராமக் கோயில்களில் தொன்றுதொட்டு அனைத்து மக்கள்களுக்கும் இருந்த உரிமைகளை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கையில் எடுத்துக்கொண்டு பெரும்பான்மையான மக்களை ஒதுக்குவது முறையற்றது. பேரையூர் அருகே உள்ள உத்தபுரம் முத்தாலம்மன் கோவில் அரச மரத்திற்கு மாலை அணிவித்ததிலும், ஆத்தங்கரைப்பட்டி மற்றும் எழுமலை முத்தாலம்மன் கோவில் அம்மன் சிலை ஊர்வலத்தில் வந்த தேவேந்திர குல மக்களை தனிமைப்படுத்தி பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் தொடுக்கப்பட்டு அம்மக்ககளின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பிற சமுதாயங்களோடு இணைந்தும் விழா எடுக்க அனுமதிப்பதில்லை, தனியாகவும் விழா எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஒரு பக்கம் பல நூறு வருடங்களுக்கு முன்பு கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாமியர்களாக மாறியவர்களை கார்வாப்சி எனும் நிகழ்சியின் மூலம் தாய்மதம் திருப்புதல் எனும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் தாய் மதத்திற்குள்ளேயே வழிபாட்டு உரிமையும், வாழ்வுரிமையும் மறுக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் அண்மைக் காலமாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவே கிராமப்புறக் கோவில்களையும், இந்து அறநிலைத் துறையின் கீழ் கொண்டு வருவதும் வழிபாட்டுத் தளங்களில் வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடியவர்கள் மீது கூட்டுத் தண்டம் (FUNITIVE) விதிப்பதும் காலத்தின் தேவையாகும்.எழுமலைப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடும், தாக்குதல் கொடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக