....30.10.2015 அன்று வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது....தோழர் கோவன் இந்த தேசத்திற்கு அப்படி என்ன துரோகம் செய்துவிட்டார் ...அவர் மீது வழக்கு போட ... நள்ளிரவில் கைது செய்ய ..?.... எல்லாம் அரசியல் காரணங்கள் தான் ...... ஆட்சி மாற்றத்திற்கு தமிழக அரசின் டாஸ்மாக் வியாபாரம் ஒரு காரணமாககிவிடக்கூடாது .. பொது மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடும் என்ற பயம்தான் ... இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது சென்னையில் சசிகலா குடும்பத்தினர் 1000ம் கோடி அளவிற்கு 11 தியேட்டர்களை வாங்கி குவித்துள்ளார் , அதை பத்திரிக்கைகள் எழுதிவிடாமல் கோவன் கைதின் மூலம் திசை திருப்பும் முயற்சி என்றும் சொல்கிறார்கள் ......இந்த ஆட்சியில் பூணுல் அறுத்ததற்காக நான்கு பெரியார் தொண்டர்கள் இதே சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டார்கள் ... இப்போது கோவன் .... ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காரணம் இருந்தும் H .. ராஜா மீது நடவடிக்கை எடுக்க தய ங்குகிறது இந்த அரசு ... காவல் துறைக்கு சவால் விட்ட யுவராஜ் மீதும் , சாதி வன்கொடுமைகள் நிகழ்த்துகின்ற சாதி வெறியர்கள் மீதும் ஏதாவது ஒரு இந்திய தண்டனை சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக